ஹலோ விஜய் டிவியா எப்போ சார் இந்த டாஸ்க்க முடிக்கிற ஐடியால இருக்கிங்க?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழச்சியில் மூன்றாவது நாளாக நேற்றும் ஒரே டாஸ்க் கொடுக்கப்பட்டதால் நெட்டிசன்கள் கடுப்பாகி விட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்ற நாட்களாக ஒரே டாஸ்க்கை வைத்த ஓட்டி வருகின்றனர். இதனால் நேற்றும் கண்ணீரும் கம்பலையுமாக முடிந்தது பிக்பாஸ்.
இதனால் கடுப்பாகியுள்ள நெட்டிசன், எப்போது இந்த டாஸ்கை முடிப்பீர்கள் பிக்பாஸ் என கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். இன்றுடனாவது இந்த டாஸ்க்கை முடித்து ஏறக்கட்டுவார் பிக்பாஸ் என்று எதிர்பார்த்து காத்துள்ளனர்.
டெய்லி அழ விடுறீங்க..
எதுக்குடா இப்படி டெய்லி அழ விடுறீங்க.. என்கிறார் இந்த நெட்டிசன்
இந்த டாஸ்க்க முடிப்பீங்க?
ஹலோ விஜய் டிவியா எப்போ சார் இந்த டாஸ்க்க முடிக்கிற ஐடியால இருக்கிங்க? என கேட்கிறார் இவர்
100 நாள் பத்தாதே
வனிதால்லாம் அவங்க பிராப்ளம ஷேர் பண்ணா 100 நாள் பத்தாதே.. என கிண்டலடிக்கிறார் இவர்.
சீரியல் டெம்ப்ளேட்
எவ்வளவு கன்டென்ட் கொடுக்கக்கூடிய கன்டஸ்டன்ட்ஸ் கிடைச்சாலும் விஜய் டிவி அதே மொக்கை சீரியல் டெம்ப்ளேட்டை தாண்டாம மறுபடி மறுபடி எடுக்கிறான்! என்கிறார் இவர்.
கலங்க வைக்கிறது!
வீட்டு கஷ்டத்துல நாள் முழுக்க வேலை பார்த்து நைட் சாப்பிடும் போது டிவி பார்த்தா உங்க கஷ்டத்தை சொல்லி கலங்க வைக்கிறது! என்கிறார் இந்த நெட்டிசன்
கேட்கும் போது கஷ்டமா இருக்கு
எல்லோர் வாழ்விலும் சோகங்கள் கொட்டி கெடக்கு அதை கேட்கும் போது கஷ்டமா இருக்கு.. என்கிறார் இவர்


Click it and Unblock the Notifications











