இப்போதான் தெரியுதா.. நேத்தே கழட்டிவிட்டாச்சு.. இனி நீங்க.. வாங்க.. போங்க.. தான்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமலுடன் பேசும் கவினை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுடன் கவினும் ஹவுஸ்மேட்ஸ்களை அகம் டிவி வழியாக சந்திக்கிறார். அப்போது லாஸ்லியாவிடம் பேசும் கவின் போங்க வாங்க என மரியாதையாக பேசுகிறார்.

இதுகுறித்து கமல் கேட்கவே, அவங்க வீட்டில் எல்லோரும் பார்ப்பார்கள் என்று கூறுகிறார் கவின். இதனை பார்த்த நெட்டிசன்கள் 90 நாட்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடிக்க வேண்டிய கூத்தையெல்லாம் அடித்துவிட்டீர்கள், இப்போதுதான் வீட்டில் எல்லோரும் பார்ப்பார்கள் என்று தெரிகிறதா என கேட்டு விளாசியிருக்கின்றனர்.

மேலும் பலர் கவினை லாஸ்லியா நேற்றே கழட்டி விட்டுவிட்டார். இனி வாங்க போங்க என்றுதான் பேசுவார்கள் என்று கூறியுள்ளனர். நேற்றைய எபிசோடில் கவினை ஃபிரன்ட் என்று லாஸ்லியா கூறியதை வைத்து நெட்டிசன்கள் இப்படி கூறி வருகின்றனர்.

இனிமே இப்படிதான்

நேத்துதான் பிரன்ட்டுன்னு இவன கழட்டி விட்டுச்சே.. இனி நீங்க வாங்க.. போங்க.. தான் என்கிறார் இந்த நெட்டிசன்.

ரியலைஸ் பண்றான்

இப்போதான் வீட்ல பாப்பாங்கன்னு ரியலைஸ் பண்றான்.. அய்யோ.. என்கிறார் இந்த நெட்டிசன்.

மரியாதை கலந்த பயமா?

வீட்ல பாப்பாங்கன்னு வெளில வந்து தான் தெரியுதா இல்லை அவங்க அப்பா ஆடியன்ஸ் பக்கம் உக்காந்து இருப்பாரோன்னு மரியாதை கலந்த பயமா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

என்னம்மா பல்டி

85 நாட்கள் பண்ணதையும் வீட்ல பாத்துட்டுதான் இருந்தாங்க.. இவன் என்னம்மா பல்ட்டி அடிச்சி அடிச்சி பேசுறான் என்கிறார் இந்த நெட்டிசன்.

கல்லா கட்டும் கவின்

எல்லாமே நாடகம்தான்! திட்டம்தான்! மாஸ்டர் பிளானால் கல்லா கட்டும் கவின்!

சான்ஸே இல்லை கவின்

அடேங்கப்பா!என்னா ஒரு உரை! சுபாஷ் சந்திர போஸின் வீரஉரை போல்! சான்ஸே இல்லை கவின்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X