லாஸ்லியாவுக்கு இதைவிட சிறப்பான தண்டனை வேற என்ன இருக்க முடியும்? நெட்டிசன்ஸ் மரண கலாய்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கவினுடன் நெருங்கி பழகும் லாஸ்லியாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா மற்றும் கவினுக்கு இடையிலான உறவு நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. இதனை நட்பு என்று லாஸ்லியா சொன்னாலும் அது நம்பும்படி இல்லை.
லாஸ்லியாவின் நடவடிக்கைகள் கவின் மீதான காதலையே வெளிப்படுத்துவதாக உள்ளது. கவினுக்காக தனது சேரப்பாவையே தூக்கி எறிந்துவிட்டார் லாஸ்லியா.

கவினுடன் பேசுவேன்
மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒருவரிடம் மட்டுமே பேச முடியும் என்றால் யாருடன் பேசுவீர்கள் என்று கேட்ட போதும் கவினுடன் தான் பேசுவேன் என பட்டென பதில் கொடுத்தார் லாஸ்லியா.

இப்போ ரொம்ப பிடிக்கும்
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரமோவில் கவினை முன்பு பிடிக்கும் இப்போ ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும் கவினுக்கு நல்ல மனசு இருக்கு என்றும் கூறி புகழ்ந்தார் லாஸ்லியா.
அவரு பெரிய தியாகி
லாஸ்லியாவின் புகழாரத்தை கேட்ட நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர்.
அப்போ பிடிக்கும், இப்போ ரொம்ப பிடிக்கும், ஏன்னா அவரு ரொம்ப பெரிய தியாகி, ச்சை.. நீ எதுக்கு ஃபர்ஸ்ட் உள்ளே வந்த லாஸ்லியா? கவினின் அருமை பெருமைகளை பாராட்டாவா? உன்னோட கொஞ்சலான பேச்சும் பார்வையும் அவங்கக்கிட்ட பாக்குறப்போ அசிங்கமா இருக். இரிட்டேட்டிங் ஒன்னு சுயபுத்தி இருக்கனும் இல்ல சொல் புத்தி இருக்கனும். ரெண்டுமே இல்ல என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஃபுல் ஃபோகஸ்
பிக்பாஸ் கேமரா ஃபுல்லா சாண்டியையும் கவினையும் ஃபோகஸ் பண்றாங்க.. ஏன் விஜய் டிவி புராடெக்ட் என்பதாலா? சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இதையேதான் பண்றீங்க என்று கோபப்படுகிறார் இவர்.
சிறப்பான தண்டனை
இந்த லாஸ்லியா கவின் காதல் பிக்பாஸ் வீட்டோட முடிஞ்சுறாம கல்யாணம் பண்ணிக்கனும்னு மனதார வாழ்த்துறேன்.
லாஸ்லியாவுக்கு இதைவிட சிறப்பான தண்டனை வேற என்ன இருக்க முடியும்? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
புரமோட் பண்ணீக்குங்க
எப்படி வேண்டுமோ புரமோட் பண்ணீக்குங்க.. நாங்க என்னவோ கவினை தவிர வேற எதையும் பார்க்காத மாதிரி என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
அதுக்காக இந்த புரமோவா?
கவினுக்கு ஹேட்டர்ஸ் அதிகமாயிட்டாங்க அதனால இந்த புரமோவா? விஜய் டிவி கவின ஃபைனலிஸ்ட்னு முடிவு பண்ணிட்டாங்க என்று கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











