இதெல்லாம் ஒரு டாஸ்க்கு.. இதுக்கு ஒரு புரமோ வேற.. இன்னைக்கும் எபிசோடு மொக்கையாதான் இருக்குமா?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 93 : வீட்டின் ராஜாவான தர்ஷன்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியான இரண்டாவது புரமோ குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 93வது நாளை எட்டியிருக்கிறது. 100 நாள் நிகழ்ச்சியான பிக்பாஸ், 15 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் பின்னர் 16வது போட்டியாளராக மீரா மிதுனும் வைல்டு கார்டு என்ட்ரியாக நடிகை கஸ்தூரியும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபைனல் நெருங்கி வருகிறது. இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்டனர்.

ரசிக்கும்படி இல்லை

ரசிக்கும்படி இல்லை

தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், பிக்பாஸே பேசி நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கொடுக்கிறார். மற்றபடி டாஸ்க்குகள் எதுவும் ரசிக்கும் படியாக இல்லை.அதேபோல் பிக்பாஸ் வீட்டில் எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் காதல் கடலை என்றே ஓட்டி வருகின்றனர். இதனால் கடுப்பாகியுள்ளனர் பார்வையாளர்கள்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் புரமோவா என கேட்டு ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். தர்ஷனை மன்னராக்கி ஹவுஸ்மேட்ஸ்களை பணிவிடை செய்ய வைத்துள்ளார் பிக்பாஸ்.

மொக்கைதான்

மொக்கைதான்

இந்த புரமோ குறித்து பல்வேறு கருத்துக்களை கூறியுள்ள நெட்டிசன்கள் அந்தளவுக்கு சுவாரசியமாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இன்றும் நிகழ்ச்சி மொக்கையாகதான் இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறியுள்ளனர்.

இதெல்லாம் ஒரு டாஸ்க்?

அப்போ இன்னை ஷோ மொக்கையா இருக்க போகுது, ஃபைனல்ஸ் நெருங்கிட்டுருக் இப்போ இதெல்லாம் தேவையா? நிறைய பிஸிக்கல் டாஸ்க் கொடுத்து எந்த கன்டெஸ்ட்டன்ட்ஸ் எலிஜிப்பில்னு மக்களுக்கு காட்டனுமா வேண்டாமா? இந்த மன்னன், சொம்பு தூக்குறது, இதெல்லாம் ஒரு டாஸ்க்கா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

மகத் அட்வைஸ்

ரெட் கார்டு வாங்குன மகத் இந்த கக்கூஸ் கேங்குக்கு அட்வைஸ் பண்ணுனா.. இதுக அந்த லட்சனத்துல விளையாடி இருக்குதுக என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். இத பார்க்கும் போது கரடி காரிதுப்புன மொமென்ட். டாஸ்க் செய்யாத கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்.

இதான் டாஸ்க் போல..

மகத்க்கிட்ட இருந்து கவின், லாஸ்லியாவை காப்பாத்தனும். கவின்க்கிட்ட இருந்து மகத், யாஷிகாவை காப்பாத்தனும்.
இதான் இன்னைக்கு டாஸ்க் போல பலே பலே என்று கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்.

நல்லா இருக்காது போல

இன்னைக்கும் எபிசோடு நல்லா இருக்காது போல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல

கவின் அன்ட் மகத் ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல என்கிறார் இந்த நெட்டிசன்.

அழகோ அழகு

தர்ஷன் டைட்டில் வின் பண்ணினதும் மக்கள் தர்ஷனை இப்படிதான் தூக்கப் போறாங்க.. அதை கவினும் ஷெரினும் தூக்கி ப்ராக்டிஸ் பண்ற காட்சியை பாக்குறது அழகோ அழகு,.. என்கிறார் இந்த நெட்டிசன்.

இதெல்லாம் ஒரு புரமோவா?

என்னடா இதெல்லாம் ஒரு புரமோவா!!! என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X