தெறி பேபி.. தர்ஷன் நீ வேற லெவல்.. கவின் அன்ட் லாஸ்லியாவுக்கு ஆப்பா!!
Recommended Video
சென்னை: ஷெரினையும் சாண்டியையும் காப்பாற்ற பச்சை மிளகாய்களை நறநறவென கடித்து சாப்பிட்டதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியான முதல் புரமோவில் யாரையாவது காப்பாற்ற விரும்பினால் பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என கன்டிஷன் போட்டார் பிக்பாஸ்.
இதனைக் கேட்ட தர்ஷன் கொஞ்சமும் யோசிக்காமல், ஷெரினையும் சாண்டியையும் காப்பாற்றுவதற்காக இரண்டு பச்சை மிளகாய்களை எடுத்து நறநறவென கடித்து சாப்பிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தர்ஷனின் ஸ்பிரிட்டை பாராட்டி வருகின்றனர்.
தெறி பேபி
தெறி பேபி தர்ஷன்.. ஷெரினையும் சாண்டியையும் பச்சை மிளகாய் சாப்பிட்டு காப்பாற்றிவிட்டார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கவினால முடியுமா?
லாஸ்லியா என்ன சாப்பிட போறாங்க கவினுக்கா.. கவினால முடியுமா லாஸ்லியாவுக்காக சாப்பிட என்று கேட்கிறார் இவர்.
10 பச்சை மிளகாய் சாப்பிடனும்
லாஸ்லியாவ காப்பத்தனும்ன்னா கவின் 10 பச்சை மிளகாய் சாப்பிடனும் சொன்னா அவ்வளவு தான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
விஜய்டிவியின் ஒரு சார்பு
நல்ல விளையாட்டு வீரருக்கான தரம் உள்ளது. ஆனால் இந்த விஜய் டிவி முழுக்க ஒரு சார்புடன் உள்ளது. சாண்டி மற்றும் கவினின் நாமினேஷன் திட்டங்களை ஒளிபரப்பவே இல்லை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு
ப்பா... ஷெரின் மேல அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
சாண்டி மேலேயும் தான்
ஓ.. தர்ஷன் அவ்வளவு லவ் ஷெரின் மேல.. சாண்டி மேலயும் தான்.. என்று கூறுகிறார் இவர்.
செம டஃப் டாஸ்க்
2 பச்சை மிளகாய்க்கு 2 பேரா ரொம்ப சிம்பிளா இருக்கே.. போனமுறை செம டஃப் டாஸ்க்ஸ் என்கிறார் இந்த நெட்டிசன்.
வேற லெவல்
தெறி பேபி.. கவின் அன்ட் லாஸ்லியாவுக்கு ஆப்பா.. தர்ஷன் நீ வேற லெவல்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











