ஒரு பொண்ணு 4 பேர காதலிச்சா ஒத்துப்பீங்களா? செருப்படி கேள்வி கேட்ட கஸ்தூரி! கொண்டாடும் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: ஒரே நேரத்தில் நான்கு பெண்களை காதலித்த கவினை நாக்கை பிடுங்க்கிக்கொள்ளுமாறு கேள்வி கேட்டுள்ளார் கஸ்தூரி.
நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக நேற்று நுழைந்தார். வந்த கையோடு தனது வேலையை தொடங்கிய கஸ்தூரி பாரபட்சம் இன்றி அனைவரையும் கலாய்த்து வருகிறார்.
நேற்று ஸ்பெஷல் பவர் மூலம் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு வித்தியாசமான தண்டனையை கொடுத்து மிரள விட்டார். கவினுடனான காதல் குறித்து சாக்ஷியிடம் சந்து கேப்பில் கிடா வெட்டினார் கஸ்தூரி.

நாரிய கவின்
இந்நிலையில் இன்றைய புரமோவில் கவினை நாரவிட்டுள்ளார். கவினின் நாலு பேரை காதலித்தால் பிரச்சனை வராது என்ற யுத்தியை வைத்து நாக்கை பிடுங்கிக்கொள்ளுமாறு கேள்விக்கேட்கிறார் கஸ்தூரி.

ஃபியூஸ் போன பல்ப்
மேலும் ஒரு பெண் 4 பேரை காதலிச்சா ஒத்துப்பீங்களா என்றும் அவரை விளாசியிருக்கிறார் கஸ்தூரி. கஸ்தூரி கேள்விகளால் கவினின் முகம் ஃபியூஸ் போன போல் ஆகிவிடுகிறது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென முழிக்கிறார்.

தோலுரிக்கும் கஸ்தூரி
ஆக வந்த வேகத்தில் தனது வேலையை இனிதே தொடங்கிவிட்டார் கஸ்தூரி. கஸ்தூரியின் அதிரடியால் உச்சி குளிர்ந்து போய் உள்ளனர் பார்வையாளர்கள். கவினின் முகத்திரையை தோலுரிக்கும் கஸ்தூரியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அவற்றில் சில,
சரியான செருப்படி
இன்னும எத்தனை பெண்ணை இப்படி ஏமாற்றுவன்னு தெரியல அதுக்கு நஷ்ட ஈடா நேற்று சரியான செருப்படி.. கஸ்தூரி ஆர்மிடா என்று தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.
பொம்பளைங்க என்ன பொம்மையா
சிறந்த செருப்படி.. பொம்பளைங்க என்ன உனக்கு டாய்ஸா விளையாடுறதுக்கு என்று கேட்கிறார் இவர்.
செருப்பாலதான் அடிச்சேன்
கவின்: கஸ்தூரி நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பாலையே அடிச்ச போல இருந்திச்சு..
கஸ்தூரி: டேய் போல இல்லடா.. செருப்பால தான் அடிச்சேன். என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
தலைவி வாழ்க
மக்கள் கேட்க வேண்டியதை தில்லா கேட்குற எங்கள் தலைவி வாழ்க.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
முகத்த காணோம்
என்னடா முகத்த காணோம் என்று கவினை கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











