வாரே வா.. பேக் டூ ஃபார்ம்.. மாஸ் காட்றீங்க.. வனிதாவை வெளுத்த ஷெரினுக்கு நெட்டிசன்ஸ் புகழாரம்!

Recommended Video

Watch Video : Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 74

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை எதிர்த்து பேசி வெளுத்தெடுத்த ஷெரினை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியான முதல் புரமோவில் ஷெரினுக்கும் வனிதாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. தர்ஷனுடனான உறவை அஃபையர் என்று கூறிய வனிதாவை லெப்ட் அன்ட் ரைட் வாங்குகிறார் ஷெரின்.

இதுவரை வனிதாவிடம் நட்பாக இருந்த ஷெரின், தற்போது வனிதாவின் ஒரிஜினாலிட்டியை அறிந்து அவரிடம் சண்டை போடுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வெரி நைஸ் ஷெரின் என்று அவரை புகழ்ந்து வருகின்றனர்.

தவறான நரம்ப தொட்டுட்டிங்க

''வாரேவா.. ஷெரின் பேபிக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு கோபம் வந்திருக்கு, என்ன துணிச்சல் என்ன தைரியம் பெண்ணே.. வனிதா நீங்க ஒரு தவறான நரம்ப தொட்டுட்டீங்க, ஷெரின் உங்கக்கிட்ட நல்லா பழகுனா நீங்க கதைக்கட்டலாம்னு அர்த்தம் இல்ல அங்க உண்மையா நடக்குற லவ்வ பேசு, நல்ல ஃபிரன்ட்ஸ ஏன் தப்பா பேசுற, டேய் நான் என்னடா பண்ணிட்டேன் உனக்கு? மரண மாஸ்!" என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஷெரினுக்கு தான் ஓட்டு

"ஷெரின் மாஸ் காட்றா ஏய் என்னடா பண்ணியிருக்கான் உனக்கு" வனிதா எப்பவும் போல உளர ஆரம்பிச்சுடுச்சு. உண்மையில் நாரதர் வேலை செஞ்சாதான் பிழைக்க முடியும்னு அவசியம் இல்லை. என்னமோ இதுக்கு அப்புறம் மக்கள் ஷெரினுக்கு தான் ஓட்டுப்போடுவாங்க'' என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

செம அதிர்ச்சி தெரியுது

''வாவ்.. வனிதாவோட ஃபேஸ் ரியாக்ஷன பாருங்க.. 0.05 செம அதிர்ச்சி தெரியுது'' என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நீங்க பெஸ்ட்

"ஷெரின் மேடம்... நீங்க பெஸ்ட்..நீங்க சொல்ற பதில் எல்லாம் சரியா இருக்கு.. அது வனிதாகிட்டயா இருக்கட்டும் இல்ல லூஸ்கிட்டயா இருக்கட்டும்..அதுவும் நேத்து விவாதத்துல கேட்ட கேள்விலாம் அந்த நாட்டிய பேரொளிய செருப்பால அடிச்சது போல இருந்துச்சு" என்று கூறுகிறார் இவர்.

நயவஞ்சகி

வாவ் ஷெரின் வெறியோட இருக்கு.. நீ போம்மா.. உனக்கு காமன் சென்ஸ் இருக்கா? வனிதா தர்ஷன் விஷயத்துலயும் மூக்க நுழைச்சு அவனுக்கு அறிவுரை சொல்லுச்சு. தேவையில்லாம மூக்கை நுழைக்கிற நயவஞ்சகி" என்று கூறுகிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X