முதல் நாளேவா.. ரைட்டு.. வனிதா வந்த வேலையை சிறப்பா பண்ண ஆரம்பிச்சுடுச்சு!
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ள வனிதா, ஹவுஸ்மேட்ஸ்களுடன் சண்டை போடுவதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ்.
இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார் வனிதா. வந்த கையோடு, எப்போதும் போல சண்டையை ஆரம்பித்து தனது வேலையை தொடங்கிவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வனிதாவை வச்சு செய்து வருகின்றனர்.
வாத்து ஆமை ஆயிடுச்சு
ஆமை புகுந்த வீடு உருப்படாது அப்டின்னு சொல்வாங்க
இப்போ வாத்து ஆமை ஆகிடுச்சு. ஃபர்ஸ்ட் உங்க பர்சனல் லைஃப் முதல்ல பாருங்க அப்புறம் மத்தவங்கள பத்தி கமென்ட் பண்ணுங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
நான் வந்துட்டேன்
வனிதா, ஓ எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்களா.. நான் வந்துட்டேன் என்று கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
முதல் நாளேவா?
வனிதா முதல் நாளேவா.. என்று கேட்கிறார் இவர்.
டைட்டா ஒரு அறை
வயித்தெரிச்சல் வனிதாவுக்கு ஷெரின் டைட்டா ஒரு அறை கொடுக்கனும் என்கிறார் இந்த நெட்டிசன்.
2ஆம் உலகப்போர் வனிதாவால்
மூன்றாம் உலகப்போர் வனிதாவால் உருவாகும்! என்கிறார் இந்த நெட்டிசன்.
ஜெயிக்க வாய்ப்பு
இந்த போரினால் ஷெரின் டைட்டில் ஜெய்த்து விட வாய்ப்பு இருக்கு
வத்திக்குச்சி இஸ் பேக்
வத்திக்குச்சி இஸ் பேக்... அன்னை வனிதா.. வாத்து வனிதா.. என்று கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
கன்டென்டு ரெடி
வனிதாவால் இதோ கன்டென்டு ரெடி! என்று கூறுகிறார் இவர்.
பிக்பாஸ்க்கு கேட்டுருச்சு
அப்பாடா.. நேத்துதான் சொன்னேன்.. ரொம்ப மொக்கையா போகுது.. ஷோ பார்க்க முடியலன்னு.. என் குரல் ஆண்டவனுக்கு கேட்டுச்சோ இல்லையோ பிக்பாஸ்க்கு கேட்டுருச்சு.. கொண்டு வந்துட்டான்யா வனிதாவ.. செம செம.. நன்றி பிக்பாஸ் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
சிறப்பா ஆரம்பிச்சுடுச்சு
ரைட்டு.. வனிதா வந்த வேலையை சிறப்பா பண்ண ஆரம்பிச்சுடுச்சு.. ஷெரினுக்கு கொஞ்சம் ஓட்ட இன்க்ரீஸ் பண்ணாம வெளிய போகாது என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











