ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி. கட்சி தாவல் இங்கே தர்மம்டா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு வாரமாக மக்களை பாடாய் படுத்திவரும் லவ் கான்செப்ட்டுக்கு கமல் என்டு கார்டு போடுவாரா என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் இன்று அகம் டிவி வழியாக அகத்திற்குள் சென்று சந்திக்கவுள்ளார். அப்போது இந்த வாரம் நடந்த சம்பவங்களை அவர் ரீகால் செய்து ரிவிவ்யூ கொடுப்பார்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் கமல் ஒரு வாரமாக ரசிகர்களை பாடாய் படுத்திவரும் லவ் கான்செப்ட்டுக்கு என்ட் கார்டு போடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நேற்று கவின் குலுங்கி குலுங்கி அழுத நிலையில் அது குறித்து பேசும் கமல் யார் யாரை காதலிக்கிறீர்கள் என்று கேட்பாரா, கவினை கண்டிப்பாரா அல்லது கவினின் காதல் விளையாட்டு சரி என்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அவரை வெளியே விடலயாம்
ஒருத்தன பைத்தியமா விரும்புன ஓவியாவே , தற்கொலை முயற்சி பண்ணபிறகு தான் வெளிய விட்டான்.. இவரு விளையாடிட்டு, வெளிய ஓடிடுவாராம் என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
சாக்லேட்தான்யா
அனைத்திற்கும் அஸ்திவாரம் போட்டது இந்த சாக்லேட்தான்யா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
டேஸ்ட்டா இருந்துச்சா
வழக்கம்போல எல்லா கன்டெஸ்டன்ட்ஸ்கிட்டயும் சாக்லேட் டேஸ்ட்டா இருந்துச்சான்னு கேட்டுட்டு ஒரு மணி நேரத்த ஓட்டிடுவீங்க.. கடைசி 15 நிமிஷம் ஏதாச்சும் ஓரு வீணா போன கன்டெஸ்ட்டன்ட சேவ் பண்ணி சனிக்கிழமை ஷோவுக்கு என்ட் கார்டு போட்டுருங்க தலைவரே என்கிறார் இவர்.
சாக்லேட்ட வச்சு பஞ்சாயத்தா
வாவ்.. கமல் சார் ஜி ஃபார்மல் டிரெஸ்ல க்யூட்டா இருக்கீங்க.. அச்சச்சோ இன்னைக்கும் சாக்லேட்ட வச்சு பஞ்சாயத்தா.. என கேட்கிறார் இவர்.
வாங்க கண்டுபிடிப்போம்
கடைசில அந்த சாக்லேட்ட யார்தாங்க சாப்பிட்டா என வாங்க கண்டுபிடிப்போம் என கமல்ஹாசன் முடித்திருக்க வேண்டும் என்கிறார் இந்த நெட்டிசன்.
வேற ஏதாவது சொல்லுங்க
ஆண்டவரே கொஞ்சம் அந்த பிக்பாஸ்கிட்ட கவின் சாக்ஷி, லாஸ்லியாவோட இந்த லவ் கன்டென்ட்டக்காக வெச்சு இருக்கார்னு நல்லா தெரியுது. ஆனா அது எங்களுக்கு பாக்க சகிக்கல அதை மாத்தி வேற ஏதாவது பண்ண சொல்லுங்க ஆண்டவரே என்கிறார் இவர்
என்ட்கார்டு போட்டுடுங்க
வாரேவா.. இன்னைக்கு ஃபுல்லா இனிப்புதானா.. நம்மவர் கையில சாக்லேட்டு, அப்போ எல்லாருக்கும் இருக்கு இன்னைக்கு இனிப்பு.. கமல் சார் பார்க்கறதுக்கு எப்பவும் போல ரொம்ப ஹேன்ட்சமா இருக்காரு.. இந்த சாக்லேட் மூனு நாளு நாளா என்னமா பாடுபடுத்து பாவம் இன்னைக்கு எப்டியாச்சும் என்ட் கார்டு போட்டு வச்சுருங்க.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கட்சி தாவல் இங்கே தர்மம்டா
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி. கட்சி தாவல் இங்கே தர்மம்டா என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











