என்னய்யா கவினையே வச்சு செய்றீங்க.. சாண்டியோட வில்லு பாட்டுலேயும் விடல! கேம் ஆன்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினை சாண்டியும் தனது வில்லுப்பாட்டின் மூலம் வாரியுள்ளார்.
காதலையும் மோதலையும் மட்டுமே பிரதானமாக கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக நாட்டுப்புற கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பொம்மலாட்டம், தெருக்கூத்து என அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு வில்லுப்பாட்டு பயிற்றுவிக்கப்பட்டு, ஹவுஸ்மேட்ஸ்கள் வில்லுப்பாட்டு பாடுகின்றனர். இதுதொடர்பான முதல் புரமோவில் சாண்டியின் டீம் வில்லுப்பாட்டு பாடுகின்றனர்.

வில்லுப்பாட்டு
அப்போது கவினை அடங்கமாட்டான், வாய் கிழிய பேசுவான், பிக்பாஸ் வீட்டின் காதல் மன்னன் என இஷ்டத்துக்கு கலாய்த்துள்ளார். ஏற்கனவே வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த கஸ்தூரி, வில்லுப்பாட்டு பாடி கவினின் காதல் விளையாட்டை வாரினார்.தற்போது சாண்டியும் கவினை வாரியுள்ளார். இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மன்மத லீலை மன்மதன்
காதல் மன்னன் இல்லை, மன்மதலீலை மன்மதன்னு சொல்லுங்க. அப்படி சொல்றது அவருக்கும் அவருடைய காதலிக்கும் ரொம்ப பெருமையான விஷயம்தானே. காவிய காதல் இல்லையா.. வெட்கமே இல்லாம தன்னை துப்பினாலும் சிரிச்சிப்பாங்க அந்த லவ் பர்ட்ஸ். சாண்டி ராக்ஷ்.. முகென் எப்போதும் போல அமேஸிங்..என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
மதிப்பதேயில்லை
சாண்டி பாவம் கவினுக்கு வார்னிங் கொடுத்தே டையர்டு ஆகி ஃபீல் பண்றான் அடிக்கடி.. சாண்டி ஃபேன் இல்லை ஆனா கவின் சும்மா அண்ணா அண்ணான்னு கூப்பிட்டாலும் லாஸ்லியாவிடம் இருந்து விலகு என்ற சாண்டியின் அறிவுரையை மதிப்பதில்லை என்கிறார் இந்த நெட்டிசன்.
மிக்சர் கொடுங்க
என்னடா ஒருத்தி உப்புக்குசப்பா சும்மாவே உட்கார்ந்து இருக்காள்.. மிக்சர் ஆச்சும் கொடுங்கடா சாப்பிட்டு இருக்கட்டும்.. என லாஸ்லியாவை கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
பாவம்மா இருக்கு
எப்போதும் கவின் லாஸ்லியாவுடன் இருப்பதால் சாண்டி இப்போதெல்லாம் கவினை அதிகம் மிஸ் செய்கிறார். அவர் உண்மையான ஃபிரன்ட்.. பாவம்மா இருக்கு பார்க்க என்கிறார் இந்த நெட்டிசன்.
கக்கூஸ் மன்னன்
இன்னுமா முடியலை இந்த மொக்க டாஸ்க்.. அவன் காதல் மன்னன் இல்லை.. கக்கூஸ் மன்னன் டர்ட்டி ஃபெலோ என்கிறார் இந்த நெட்டிசன்.
வாய் கிழிய பேசுவான்
அவன் அடங்க மாட்டான் வாய் கிழிய பேசுவான்.. பிக்பாஸ் வீட்டோட காதல் மன்னன் கவின்.. ஏன்டா இப்படி அவனயே வச்சு செய்றீங்க... என்று கேட்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











