கடைசியா வனிதா ஜெயிச்சுடுச்சுய்யா.. நல்ல ஃபிரன்ட்ஷிப்ப பிரிச்சுடுச்சு..! இது யாருக்கு போட்ட ஸ்கெட்ச்?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினை அழவைத்து தர்ஷனுடனான நட்பை வனிதா முறித்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஷெரினுக்கு தர்ஷன் மீது அஃபையர் இருப்பதாக கூறினார் வனிதா. இதனைக் கேட்டு அதிர்ச்சியான ஷெரின், வனிதாவை உண்டு இல்லை என செய்துவிட்டார்.
இருப்பினும் அந்த வார்த்தையை தாங்க முடியாத ஷெரின், சேரனிடம் கூறி கதறி அழுகிறார். எனக்கு தர்ஷனும் வேண்டாம் வனிதாவும் வேண்டாம் என கூறி கதறுகிறார். இதுதொடர்பான புரமோ வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அழக்கூடாது
டீயர் ஷெரின் பேபி.. அழாதடா, கண்ணீர் விடக்கூடாது, நீங்கள் எப்போதும் ஸ்ட்ராங். நாங்கள் எப்போதும் உங்கள் உறுதியை ரசிக்கிறோம். துணிச்சல் முதிர்ச்சி! நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்.. மக்கள் உங்களை நேசிப்பார்கள்.. உங்களை பற்றி எங்களுக்கு தெரியும்.. ஒரு நல்ல மனிதர் எப்போதும் தோற்றுப் போகக்கூடாது.. என்று கூறியுள்ளார் இந்த ரசிகர்
பிரிச்சுடுச்சு
கடைசியா வனிதா ஜெயிச்சுடுச்சு.. நல்ல ஃபிரன்ட்ஸ் பிரிச்சுடுச்சு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
பெயரை கெடுக்க
வனிதாவோட டார்கெட் தர்ஷன்தான், அவரின் பெயரை கெடுக்க ஷெரினை யூஸ் பண்ணுது என்கிறார் இந்த நெட்டிசன்.
பாயாசம் வைக்க வேண்டியதான்
ஷெரின ஆழ வச்ச வனிதா... உனக்கு அடுத்த எலிமினேஷன்ல பாயாசம் வைக்க வேண்டிய தான்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஏதாவது பண்ணுங்க
நோ நோ நோ.. ஏதோ தவறு நடக்கிறது.. தர்ஷனுக்குதான் ஸ்கெட்ச்.. சாக்ஷி, ஷெரின் ரியாக்ஷன் பாருங்க.. திட்டமிட்ட மிஷன் மாதிரி தெரியுது. அடேய் தர்ஷன் ஆர்மி மிக்சார் சாப்பிட்டுக்கிட்டு இருக்காமா ஏதாவது பண்ணுங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











