Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஆரம்பத்துல போதீஸ் விளம்பரம் மாதிரியே இருந்துச்சு.. பிக்பாஸ் புரமோ.. கதறவிடும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான லோகோ புரமோ ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகியுள்ளது.
கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை சுட்டிக்காட்டும் கமல் ஆயிரம் பொருத்தம் பார்த்து பண்ணும் கல்யாண வீட்டிலேயே இவ்வளவு கலாட்டாக்கள் இருக்கும் போது.. என இழுக்கிறார்.
பிக்பாஸ்
சீசன்
5
ல்
பங்கேற்கும்
பிரபல
ஆர்ஜே..
யாருன்னு
பாருங்க..
தீயாய்
பரவும்
தகவல்!

நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை குறிப்பிட்டு பேசும் கமல் இங்கே வீடும் பெருசு, கலாட்டாவும் பெருசு என்றும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்றும் கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த புரமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. புரமோ குறித்த தங்களின் ரியாக்ஷன்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வாய்ச் சண்டை இல்லை
அதன்படி இந்த நெட்டிசன், நாங்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பார்க்கிறது நிறைய டாஸ்க் தான் சார்.. வாய்ச்சண்டை இல்லை!!! என பதிவிட்டுள்ளார்.

என் பக்கத்துல உட்காரு..
வா வா வந்து என் பக்கத்துல உட்காரு என பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டேமெஜ்ஜான பிரபலங்கள் வகுப்பறை பெஞ்சுக்குள் அமர்ந்திருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

சண்டைக்கு தயாரா?
பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அக்கா நமக்கு எண்டெர்டெய்ன்மென்ட் வந்துருச்சு... சண்டைக்கு தயாரா என கேட்டு பதிவிட்டுள்ளார்.

புரமோ கில்லி மாதிரி இருக்கு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், லோகோவை பார்த்து டம்மி பீஸ்ஸா இருக்கும்னு நினைச்சேன்.. ஆனா புரமோ கில்லி மாதிரி இருக்கு.. இந்த சீசன் நல்லா இருக்கும் போல என பதிவிட்டுள்ளார்.

ஜால்ராதான போடுவீங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், உங்கக்கிட்ட அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியாதே ஆண்டவா! விஜய் டிவி பிராண்டுக்கு ஜால்றா தான போடுவீங்க! முதல் சீசன் மாதிரி நடு நிலைமையா இருந்தா நல்லாருக்கும்.அரசியல்வாதி ஆயிட்டிங்க, உங்ககிட்ட எப்படி நடுநிலைமை எதிர்பார்க்க முடியும்.. என கேட்டுள்ளார்.

விரு விருப்பாக பாருங்கள்
மற்றொரு நெட்டிசனான இவர், வட மாநில கலாச்சார நிகழ்வின் தொடர்ச்சி நடக்க இருக்கு. அனைவரும் காத்துக்கொண்டிருங்கள். உங்கள் வேலையை மறந்து, மற்றொருவரின் குடும்பத்தில் நிகழும் , காட்சியை விரு விருப்பாக பாருங்கள்.. என பதிவிட்டுள்ளார்.

இனி எப்போ அரசியல் பணி?
நடிகர் கமல் ஹாசன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரே!.. இனி எப்போ அரசியல் பணி? என கேட்டு கலாய்த்துள்ளார்.

ஓவியா ஆர்மிக்கள்!
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் முதல் சீசனை நினைத்து கொண்டு பெரியபாசு 5 வரை சுத்தி சுத்தி வரும் ஓவியா ஆர்மிக்கள்! என கூறியுள்ளார்.

கொளுத்தி போடுற மொமென்ட்
புரமோவை பார்த்த நெட்டிசன், தட் கொளுத்தி போடுற மொமென்ட்.... ஹ்ம் பாப்போம்.. இந்த சீசன் எப்படி இருக்க போகுதுன்னு மரண வெய்ட்டிங்.. என கூறியுள்ளார்.

எனக்கு மட்டும்தான் அப்படியா?
பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரம்பத்துல போதீஸ் விளம்பரம் மாதிரியே இருந்துச்சு.. எனக்கு மட்டும்தான் அப்படியா? என கேட்டு பங்கம் செய்துள்ளார்.

ரொம்ப மொக்கையா இருக்கு
மற்றொரு நெட்டிசனான இவர் ரொம்ப மொக்கையா இருக்கு டீசர்.. ஆனால் பிக்பாஸ் வீட்டையும் மக்களையும் பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.

கொளுத்தி போடனும்னு சொல்றீங்களா
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நல்லா கொளுத்தி போடனும்னு சொல்ல சொல்றீங்களா என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இரவு 12 மணியே
மற்றொரு நெட்டிசனான இவர், எல்லாத்தையும் காட்டுனிங்க இரவு 12 மணியே காட்ட மறந்துட்டிங்களே பிக்பாஸ் என கிண்டலடித்துள்ளார்.

இந்த சீசனுக்கு புரமோவா
பிக்பாஸ் புரமை பார்த்த இந்த நெட்டிசன், இதுவரைக்கும் 4 சீசன்ல நடந்தத இந்த சீசனுக்கு புரமோவா போட்டுடாங்க என பதிவிட்டுள்ளார்.

எதிர்பாராததை எதிர்ப்பார்ப்பது?
மற்றொரு ரசிகரான இவர், மக்கள் எதிர்பார்த்தது இந்த தடவையாவது தொகுப்பாளரை மாத்துவாங்கனுதான். கமல் இந்தமுறையும் 100 நாளும் சுயபுராணம் பாடி எங்களை கொல்ல போறீங்க.. இந்த லட்சணத்துல என்னத்தை எதிர்பாராததை எதிர்ப்பார்ப்பது..? கொஞ்சம் பக்கத்து ஸ்டேட் பிக்பாஸ் ஹோஸ்ட் எல்லாம் எப்படி நேர்மையா ஷோ பண்றாங்கன்னு பாருங்க என பதிவிட்டுள்ளார்.