கன்டென்ட் கிடைக்காமல் தடுமாறும் பிக்பாஸ்.. போட்ட புரமோ எல்லாமே மொக்க!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து இன்று வெளியான இரண்டு புரமோக்களும் சுவாரசியமாக இல்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் மக்களுக்கு நிகழ்ச்சி பார்க்கும் விருப்பமே குறைந்துவிட்டது.
நிகழ்ச்சி நேர்மையாக நடத்தப்படவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வனிதா இருந்தவரை நிகழ்ச்சி வேற லெவலில் இருந்தது.

வைல்டு கார்டு என்ட்ரி
வனிதா முதல் முறை சென்றபோதே டிஆர்பி படுத்துவிட்டது. இதனை அறிந்த பிக்பாஸ் அவரை வைல்டு கார்டு என்ட்ரியாக அழைத்து வந்தார்.

குறைந்த சுவாரிசியம்
கடந்த வாரம் பிக்பாஸிலிருந்து வனிதா இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டார். அப்போது முதலே நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்துவிட்டது. ஆனால் டிக்கெட் டு பினாலே டாஸ்க்குகளை கொடுத்து ஒப்பேற்றினார் பிக்பாஸ்

சுவாரசியம் இல்லை
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டு புரமோக்கள் வெளியாகியுள்ளது. இரண்டு புரமோக்களிலும் பெரிதாக சுவாரசியம் இல்லை. இரண்டு புரமோக்களுமே மொக்கையாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈ ஓட்டும் பிக்பாஸ்
பிக்பாஸ் வீட்டில் இருந்த நல்ல போட்டியாளர்களை எல்லாம் கவின் மற்றும் லாஸ்லியாவை காப்பாற்றுவதற்காக வெளியே அனுப்பிவிட்டு பிக்பாஸ் ஈ ஓட்டி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஷோவும் மொக்கை
புரமோவும் மொக்கை, ஷோவும் மொக்கை.. வீக்கென்ட் ஷோவும் மொக்கை என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











