என்னாது.. கவினும் லாஸ்லியாவும் அண்ணன் தங்கச்சியா?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் காதல் பறவைகளாக வலம் வரும் கவினும் லாஸ்லியாவும் அண்ணன் தங்கச்சி என்ற புது தகவல் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவும் கவினும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இவர்களின் காதலுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு குரூப்பும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு குரூப்பும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கிறது.
கவின் தான் ஏற்கனவே மூன்று வருடங்கள் ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததாக நேற்று லாஸ்லியாவிடம் கூறினார். அதனை கேட்டதும் லாஸ்லியாவின் முகம் மாறியது. ஆனால் அதுப்பற்றி வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என விட்டுவிட்டார்.

அண்ணன் தங்கை
இதனை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் சரியான நேரம் கவினிடமிருந்து எஸ்கேப் ஆகிவிடு லாஸ்லியா என அட்வைஸ் செய்தனர். இந்நிலையில் லாஸ்லியாவும் கவினும் அண்ணன் தங்கை என புதுக்கதை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அந்த முறைதானே
அதாவது சாண்டியை லாஸ்லியா தனது அண்ணன் என்று கூறுகிறார். கவினும் சாண்டியை அண்ணன் என்று கூறுகிறார். இதனால் கவினும் லாஸ்லியாவும் அண்ணன் தங்கை முறைதானே என்கின்றனர் நெட்டிசன்கள்.

விளாசும் நெட்டிசன்ஸ்
மேலும் அண்ணன் தங்கை காதலிப்பார்களா என்று கேட்டு தங்களின் இஷ்டத்திற்கு லாஸ்லியாவையும் கவினையும் விளாசியுள்ளனர். இப்படி ஒரு பாசத்தை பாசமலர் படத்தில் கூட பார்த்ததில்லை என்று திட்டி தீர்த்துள்ளனர்.
கேவலப்படுத்திட்டிங்க
கவின் என்ற அண்ணனை லாஸ்லியா என்ற தங்கை காதலிப்பது உலக வரலாற்றில் முதல் தடவை. இந்த அண்ணன் தங்கை பாசத்தை பாசமலர் படத்தில் கூட பார்த்ததில்லை. அண்ணன் தங்கை உறவை கேவலப்படுத்திட்டிங்க என்று டென்ஷனாகியுள்ளார் இந்த நெட்டிசன்.
கள்ளக்காதல்
இதுக்கு பேரு காதலா? இல்லை கள்ளக்காதல் , அசிங்கமான அருவருப்பான காதல் , இதுக்கு முரட்டு முட்டு கொடுக்கும் பக்த கோடிகள் அவங்க வீட்டு பெண்களை கூட இப்படியான கேவலமானவன் தெரிஞ்சா தெறிச்சு ஓடக்கூடியவர்களே ஆனால் இங்கன இவனுங்க போடுற அலப்பறை அருவருப்பு. என்கிறார் இந்த நெட்டிசன்
நீங்களும் உங்க காதலும்
கவினுக்கு சாண்டி அண்ணனாம். சரி லாஸ்லியாக்கு சாண்டி பிரன்ட் இல்லயாம் அண்ணனாம். சரி அப்புறம் கவின் லாஸ்லியாவுக்கு என்ன உறவு முறை ஆகும்? அண்ணண் தங்கச்சி எப்படிடா காதலிப்பீங்க? போங்கடா நீங்களும் உங்க கருமாந்தர காதலும் என்று திட்டுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











