லாஸ்லியாவ கழட்டிவிட பிளான் போடும் கவின்.. லாஸ்ட் சான்ஸ் லாஸ்.. எஸ்கேப் ஆயிடு.. நெட்டிசன்ஸ் தாறுமாறு!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 66 : தமிழ் தெரியாமல் தவித்த Sherin- வீடியோ

சென்னை: தனது பழைய காதலை கவின் தற்போது லாஸ்லியாவிடம் கூறி அவரை கழட்டி விட பார்ப்பதாக நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள கவினும் லாஸ்லியாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். தங்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவது வெளியே போய்தான் என்று கூறியிருந்தார் லாஸ்லியா.

இருவரும் நள்ளிரவில் மைக்கின் பேட்டரியை கழட்டி வைத்து ரகசியம் பேசினர். இதனை விளக்கப்படமாக போட்டு காண்பித்து அவர்களின் காதலை உலகுக்கே காட்டிவிட்டார் கமல்ஹாசன்.

ரொம்ப சீரியஸ்

ரொம்ப சீரியஸ்

நேற்று முன்தினம் எபிசோடில் வனிதா கவினிடம் இந்த காதலிலாவது சீரியஸா இருக்கிறாயா என்று கேட்டார். அதற்கு நான் எவ்வளவு சீரியஸாக இருக்கிறேன் என்பது எனக்கும் தெரியும் சீரியஸா இருக்கும ஆளுக்கும் தெரியும் என்றார்.

மூன்று வருட காதல்

மூன்று வருட காதல்

இதன் மூலம் இருவரும் சீரியஸா காதலிப்பது உறுதியானது. இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் கவின், தான் மூன்று வருடங்கள் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், பின்னர் அந்த பெண் தன்னை வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றதாகவும் கூறுகிறார்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

இதனை கேட்டு லாஸ்லியாவின் முகம் வாடி போகிறது. இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கவின், லாஸ்லியாவை கழட்டிவிட முடிவு செய்துவிட்டதாக கருத்து தெரிவித்து கழுவி ஊற்றி வருகின்றனர். அவற்றில் சில,

வேணாங்கும்போதே தெரியலையா?

ஒரு பொண்ணு 3 வருஷமா இவன் கூட பழகிட்டு இப்போ இவன் வேணாம்னு சொல்லும்போதே தெரியலையா இவன் யாருக்கும் உண்மையா இருக்க மாட்டான். என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அதே வழிமுறை

ஏற்கனவே இருந்த 3 வருச லவ் பத்தி இப்போ எதுக்கு சொல்ரான்னு புரிலையா? சாக்ஷியை கழட்டி விட்ட அதே வழிமுறை. என்கிறார் இவர்.

லாஸ்ட் சான்ஸ்

ஆடு தானாவே வந்து பிரியாணி ஆகுதுன்னு கவின் யூஸ் பண்ண பாக்குறான். இந்த கள்ளக்காதல் போதும்யா.. லாஸ்லியா லாஸ்ட் சான்ஸ் எஸ்கேப் ஆயிடு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

காதல் டிராமா போதும்

இந்த காதல் டிராமா போதும்.. எங்களுக்கு மது திரும்பவும் வரவேண்டும். அவர் சிறந்த டாஸ்க் பிளேயர், ஃபைனலுக்கு தகுதியானவர் என்று கூறுகிறார் இவர்.

எப்படி ஃபிளிர்ட் பண்ண வருது?

பிக்பாஸ்க்குள்ள வர்றதுக்கு முன்னாடி டன்னுன்னு மெஸேஜ் பண்ணிட்டு வந்தன்னு சொல்றான் உள்ள வந்ததும் எப்டி சாக்ஷி, அபி, லாஸ்லியான்னு எல்லா பொண்ணுங்க கிட்டயும் ஃபிளிர்ட் பண்ண வருது? அப்போ 3 வருஷ லவ்?? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X