இதுக்கே இப்படி பண்ணீட்டிங்களே கவின்.. நீங்களா விட்டுக்கொடுக்கப் போறீங்க?! சாயம் வெளுத்துப்போச்சு!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 79 : Clash between losliya and sandy

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் தனது உயிர் நண்பரான சாண்டியை காதலி லாஸ்லியாவுக்காக தூக்கி எறிந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் கவின், ஆரம்பத்தில் இருந்தே அந்த வீட்டில் சாண்டியுடன் மட்டும் நெருக்கம் காட்டி வந்தார். கவின், சாண்டி, சரவணன் மட்டுமே குழுவாக இருந்தனர்.

நாளாக நாளாகதான் மற்றவர்களிடம் பழகத் தொடங்கினர் கவினும் சாண்டியும். என்ன நடந்தாலும் என் நண்பனை விட்டுக்கொடுக்க முடியாது என்றிருந்தார் சாண்டி.

சாண்டி நாமினேஷன்

சாண்டி நாமினேஷன்

ஒருமுறை ஓபன் நாமினேஷனின் போதுதான் சாண்டி கவினின் பெயரை நாமினேட் செய்தார். அப்போதும் எனக்கு என் பழைய ஜாலியான கவின் வேண்டும் என்று கூறி கதறினார்.

ஐந்து பேர் கேங்

ஐந்து பேர் கேங்

கவினும் தனக்கு தன் நண்பர்கள்தான் முக்கியம் என கூறி வருகிறார். கவின், சாண்டி, லாஸ்லியா, முகென், தர்ஷன் என ஐந்து பேர் மட்டும் ஒரு கேங்காக உள்ளனர். ஒரே மாதிரி டி ஷர்ட் , டிரெஸ்கோட் என மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு இருந்தனர்.

சாண்டியிடம் எகிறிய கவின்

சாண்டியிடம் எகிறிய கவின்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனதுமே லாஸ்லியாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதனை சாண்டி கேட்க போக, கோபித்துக்கொண்டார் லாஸ்லியா. லாஸ்லியா கோபமானதால் சாண்டியிடம் எகிறினார் கவின்.

உதறி தள்ளிய கவின்

உதறி தள்ளிய கவின்

இதனால் மிகவும் வருத்தப்படுகிறார் சாண்டி. லாஸ்லியாவுக்காக 5 வருட நட்பை குப்பை போல் உதறி தள்ளிவிட்டார் கவின். இதே கவின்தான், நான் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை, என் நண்பர்கள் வெற்றி பெற வேண்டும் என ஒவ்வொரு நாமினேஷனின் போதும் கூறி சிம்பத்தியை கிரியேட் செய்து விடுகிறார்.

வெற்றியை விட்டுக்கொடுப்பேன்

வெற்றியை விட்டுக்கொடுப்பேன்

அது மட்டுமின்றி என் நண்பர்கள் வெற்றி பெற வேண்டும், அதற்காகதான் உங்களை நாமினேட் செய்கிறேன் என சேரனையும் ஷெரினையும் நாமினேட் செய்தார். பிக்பாஸ் வெற்றியை எனது நண்பர்களுக்காக விட்டுக்கொடுப்பேன் தியாகம் செய்வேன் என்று கூறிய கவின், ஒரு சின்ன விஷயத்திற்காக ஐந்து வருட நண்பனை தூக்கியெறிந்துவிட்டார்.

அவங்களுக்கு என்ன கதியோ?

அவங்களுக்கு என்ன கதியோ?

கவினின் இந்த நடிவடிக்கையை பார்த்த நெட்டிசன்கள் ஐந்து வருடம் பழகிய சாண்டிக்கே இந்த கதி என்றால், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அறிமுகமான தர்ஷனுக்கும் முகெனுக்கும் என்ன கதியோ? என கேட்கத் தொடங்கிவிட்டனர்.

வெளுக்கும் சாயம்

இதுதான் கவினின் உண்மை முகம். இப்போதுதான் கவினின் முகமூடி கிழிகிறது. கவின் தியாகம் என்று கூறியதெல்லாம் அவரின் சுயநலத்துக்காகவும் சிம்பத்திக்காவும்தான் என்று அவரை காரித்துப்பாத குறையாக விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X