இந்த சுவர் இன்னும் எத்தனை பேர காவு வாங்க போகுதோ? தர்ஷன் வெளியேற்றத்தால் நெட்டிசன்கள் கோபம்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : தர்ஷன் வெளியேற லாஸ் தான் காரணம்-வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நெட்டிசன்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினமே தர்ஷன் வெளியேற்றப்பட்ட தகவல் தீயாய் பரவியது. நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டது ஒளிபரப்பானது. தொடர்ந்து ஃபைனலிஸ்ட்ஸ் யார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி லாஸ்லியா, ஷெரின், சாண்டி ஆகியோர் ஃபைனலிஸ்ட்டுகளாக அறிவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே மக்களின் மதிப்பை பெற்று, டாஸ்க்கையெல்லாம் சரியாக செய்தார் தர்ஷன். இதனால் அவர் நிச்சயம் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விளாசல்

விளாசல்

ஆனால் தர்ஷன் எவிக்ட் செய்யப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த இரண்டு நாட்களாய் நிகழ்ச்சியையும் விஜய் டிவியையும் விளாசிய நெட்டிசன்கள் இன்றும் அதனை தொடர்ந்து செய்து வருகின்றனர். லாஸ்லியா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றதை ரசிகர்களால் ஏற்க முடியவில்லை. அவரையும் திட்டித்தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

நன்றி கடவுளே

லாஸ்லியா யாரையெல்லாம் குடும்ப உறுப்பினர் என்று அழைத்தாரோ அவர்கள் யாரும் ஃபைனல்ஸில் இல்லை.
ஃபர்ஸ்ட் சேரன் அப்பா, அடுத்து அபிராமி அக்கா, கவின் பிரன்ட், பாய் ஃபிரன்ட் அவரும் வெளியே போயிட்டாரு.. இப்போ தர்ஷன் அண்ணா.. என்ன வகையான ஜின்க்ஸ் இவர்? நன்றி கடவுளே அவள் ஷெரினையும் முகெனையும் அப்படி அழைக்கவில்லை என்கிறார் இவர்.

மாஸ்டர் பிளானர்

அப்பா, லவ்வர், அண்ணன் எல்லாரும் அவுட்.. கடைசியா பார்த்தா லாஸ்லியா மாஸ்டர் பிளானர்.. என்கிறார் இந்த நெட்டிசன்.

செம ஸ்கெட்ச்

இதுக்கே இப்படி.. லாஸ்லியா இந்த டைட்டில் வின் பண்ணா என்னாகும்.. விஜய் டிவி செம ஸ்கெட்ச்.. திருந்தவே மாட்டிங்க மக்கள்ஸ்.. என்கிறார் இந்த நெட்டிசன்.

ஒப்புக்கொள்கிறார்

தான் வெற்றிக்கு தகுதியான ஆள் இல்லை என லாஸ்லியாவே ஏற்றுக்கொள்கிறார்....ஆனால்? என்று கேட்கிறார் இவர்.

யாருக்கு டீ

எல்லா நல்ல போட்டியாளர்களையும் வெளிய அனுப்பிட்டு ஆள் இல்லாத கடையில யாருக்கு இவனுங்க டீ ஆத்த போறானுங்க விஜய் டிவி என்று கேட்கிறார் இவர்.

மதிக்காமல்

தர்ஷன் வெளியே அனுப்பபடுவது முற்றிலும் ஏற்க முடியாத ஒரு விஷயம். வாக்குகள் மதிக்காமல் செய்யப்பட்ட சம்பவம்! என்று கூறுகிறார் இவர்.

காவு வாங்கப் போகுதோ?

தரித்திரம் பிடிச்ச லாஸ்லியா.. அப்பான்னு சொன்னா
சேரன் அவுட்.. காதலன்/ நண்பன் சொன்னா கவின் அவுட்.. அண்ணன் சொன்னா தர்ஷன் அவுட்.. இன்னும் இந்த சுவர் எத்தனை பேரை காவு வாங்கப் போகுதோ என்கிறார். இந்த நெட்டிசன்.

தர்ஷனுக்கு ஆப்பு

லாஸ்க்கு ஆப்பு வெக்கனும்னு ஓட்ட பிரிச்சு பண்ணி ஷெரினுக்கு வோட்டு போட்டு தர்ஷனுக்கு ஆப்பு வெச்சிட்டிங்களேடா என்கிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X