வேண்டும் என்றே மதுமிதாவின் மூக்கை உடைத்தாரா சாண்டி? பரபரக்கும் டிவிட்டர்!
சென்னை: மதுமிதாவின் மூக்கை சாண்டி வேண்டுமென்றே உடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது பெஸ்ட் பர்ஃபார்மன்ஸ் கொடுத்தவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது வழக்கம். அதன்படி இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் மதுமிதா, சாண்டி மற்றும் முகென் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
அதனை தொடர்ந்து அவர்கள் மூன்று பேரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதற்கான டாஸ்க்கின் போது சர்ஃபிங் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஸ்கேட்டரில் மூன்று பேரும் ஒன்றாக நடக்கின்றனர்.

பெரும் பரபரப்பு
அப்போது திடீரென சாண்டி பின்னால் கையை தூக்க மதுமிதாவின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டுகிறது. இதனால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாண்டிதான் விழுந்தான்
இந்நிலையில் சாண்டி வேண்டும் என்றே மதுமிதாவின் மூக்கை உடைத்ததாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சாண்டிதான் மேல விழுந்தான். பேலன்ஸ் செய்யமுடியாமல் விழுந்திருக்கலாம். எப்படியோ மது நன்றாக முயற்சி செய்தார் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
வேணும்னே குத்திட்டான்
வேணும்னே மதுமிதாவ குத்திட்டான் இந்த சாண்டி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
சாண்டிக்கு வன்மம்
மதுவ சாண்டி முழங்கையாள குத்திட்டாப்ல குத்தி கீழ விழுறா மது, அப்போ அன்னைக்கு நடந்த சண்டை சாண்டிக்கு மறக்கல இன்னும் வன்மம் அப்படியே இருக்கு எனக்கு வருத்தம்பா மதுவை தலைவர் ஆக விடாம தடுத்துட்டாங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











