சாண்டி உங்க ஹியூமர் சென்ஸ் இப்போ ஜீரோவாம்.. பாய்சன் ஆயிட்டிங்களாம்.. பாத்தாலே கடுப்பாகுதாம்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கஸ்தூரியை கிடைக்கும் கேப்பில் எல்லாம் கவின் அன்ட் கோ இன்சல்ட் செய்வதை நெட்டிசன்கள் விரும்பவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக பங்கேற்றுள்ளார் நடிகை கஸ்தூரி. கஸ்தூரி வந்த உடனே கவின், நான்கு பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய விவகாரத்தை கையில் எடுத்தார்.
இதனால் வெறுப்பான கவின், கஸ்தூரி மீது செம காண்டில் உள்ளார். கஸ்தூரியை கண்டாலே கவினுக்கு பிடிக்கவில்லை. அவர் பேசினாலே வெறுப்பாகிறது என்ற அவர், கஸ்தூரிக்கு காக்கா என பெயர் வைத்துள்ளார்.

நாமினேஷன்
கவினுக்கு கஸ்தூரியை பிடிக்காததால் அவரது கேங்குக்கும் கஸ்தூரியை பிடிக்கவில்லை. நேற்று அவரது கேங்க் உறுப்பினர்கள் அனைவரும் கஸ்தூரி மற்றும் சேரன் பெயர்களையே நாமினேட் செய்தனர்.

கஸ்தூரியை கிண்டலடித்த சாண்டி
இந்நிலையில் இன்று பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது ஹவுஸ் மேட்ஸ்களுக்கு. அப்போது கஸ்தூரியை டீச்சர் அல்ல சத்துணவு ஆயா என்று அழைத்து கிண்டலடித்தார் சாண்டி.
ஆனால் அதற்கு மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.

மல்லுக்கட்டும் ஹவுஸ்மேட்ஸ்
இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் கஸ்தூரி வனிதாவை வாத்து வனிதா என்று கூறிவிட்டார். உடனே சாண்டி உட்பட அனைவரும் கஸ்தூரியிடம் மல்லுக்கட்டி கொண்டு வருகின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் சாண்டியின் நகைச்சுவை உணர்வு தற்போது ஜீரோவாகிவிட்டது. சாண்டியை பார்த்தால் நாளுக்கு நாள் வெறுப்புதான் வருகிறது என்ற பதிவிட்டுள்ளனர். கஸ்தூரி என்ன பேசினாலும் கவின் கேங்க் அவரை டார்கெட் செய்கின்றனர் என்று;k;k கூறியுள்ளனர்.
பாய்சனாய்ட்டிங்க
பாவம் கஸ்தூரி ஒரு வார்த்தை பேசினால் கூட எல்லோரும் அவரை டார்கெட் செய்துவிடுகின்றனர். சாண்டி எல்லோர் மனதிலும் நாளுக்கு நாள் விஷமாகிறார். வனிதா நீங்க வாத்து இல்லை காட்டு எருமை. சாண்டி உங்கள் நகைச்சுவை உணர்வு இப்போது ஜீரோவாகிவிட்டது. நாளுக்கு நாள் உங்கள் மீது வெறுப்புதான் வருகிறது என்று பதிவிட்டிருக்கிறர் இந்த நெட்டிசன்.
யானை வனிதா
இது வாத்து வனிதா இல்ல யானை வனிதா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கேமிராமேன் ரியாக்ஷன்
என்ன விவரமான பள்ளி மாணவி.. வாத்து வனிதா.. பிக் பாஸ் கேமிராமேன்.. ரியாக்ஷன்!!! என்கிறார் இந்த நெட்டிசன்.
மன்னிப்பு கேட்க சொல்லுங்க
அப்போ சாண்டி சத்துணவு ஆயானு சொல்லும்போது நீங்க எங்க போனீங்க ஸ்டுடென்ட்ஸ்? உங்கள வாத்து சொன்னா வலிக்குது அதே சாண்டி சத்துணவு ஆயானு டீச்சரை கிண்டல் பண்ணினா சிரிப்பு வருது , முதல்ல சாண்டிய மன்னிப்பு கேட்கச்சொல்லு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
சனியன் சடை பின்ன..
சேரன் மைன்ட் வாய்ஸ்: ஆகா சனியன் சடை பின்ன ஆரம்பிச்சிடுச்சே என சொல்வது போல் இருக்கிறது என்கிறார் இந்த நெட்டிசன்.
அய்யய்யோ
சேரனோட மைன்ட் வாய்ஸ் இதுங்ககிட்ட மாட்டிக்கிட்டு நான் படுறபாடு இருக்கே அய்யய்யோ என்று பதிவிட்ருக்கிறார் இவர்.
இதுல வாத்து வேற
ஏற்கனவே வத்திக்குச்சி பஞ்சாயத்து முடியல இதுல வாத்து வேற.. என கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











