ஷெரின் இப்போ உங்க டர்ன்.. கர்மா இஸ் பூமராங்! மதுவோட பாவம் சும்மாவிடுமா? நெட்டிசன்ஸ் வேறலெவல்!

Recommended Video

Watch Video : Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 74

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவுடன் ஏற்பட்ட தகராறால் கதறி அழும் ஷெரினை பார்த்து கர்மா இஸ் பூமராங் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மதுமிதா இறுதி வரை செல்லும் வாய்ப்பை பெற்றிருந்தார். மக்களிடமும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால் வனிதா போட்ட தூபத்தில் பலிகடாவான மதுமிதா மற்ற ஹவுஸ்மேட்ஸ்களின் கோபத்திற்கு ஆளானார். இதனை தொடர்ந்து ஒரு டாஸ்க்கின் போது, தமிழகத்தில் மழை பெய்யவில்லை என்பதற்காக வருணபகவான் கூட கர்நாடகாக்காரர் போல என்று கூறியதாக தகவல் வெளியானது.

தற்கொலைக்கு தூண்டி

தற்கொலைக்கு தூண்டி

இதனால் ஆத்திரமடைந்த ஷெரின் நீ எப்படி கர்நாடகாக்காரர்களை பற்றி பேசலாம் என்று கூறி மதுமிதாவிடம் சண்டை போட்டதாக கூறப்பட்டது. வனிதா, கவின், லாஸ்லியா ஆகியோருடன் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டுக்காக உன் உயிரை கொடு என்று கேட்டு மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும் கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி மதுமிதா இந்த வீட்டில் இருந்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என்று பிளாக் மெயில் செய்து மதுமிதாவை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியதாக தகவல் வெளியானது.

நினைவுபடுத்தும் நெட்டிசன்ஸ்

நினைவுபடுத்தும் நெட்டிசன்ஸ்

இந்நிலையில் யாரை மலைப்போல் நம்பியிருந்தாரோ அந்த வனிதாவே ஷெரினை அசிங்கப்படுத்தி விட்டார். தர்ஷனுடனான உறவை, ஷெரினுக்கு தர்ஷன் மீது அஃபையர் என கூறி அவரை காயப்படுத்திவிட்டார்.இதனால் இருவருக்குள்ளும் பிளவு ஏற்பட்டு பிக்பாஸ் வீடே ரணகளமாகிவிட்டது. வனிதா சொன்னதை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுகிறார் ஷெரின். ஷெரின் அழுவதை பார்த்த நெட்டிசன்கள் மதுமிதாவின் சம்பவத்தை நினைவுபடுத்தி வருகின்றனர்.

இப்படிதானே விரட்டியிருப்பாய்?

இப்படிதானே விரட்டியிருப்பாய்?

மதுமிதாவை என்ன பாடுபடுத்தினாய் அந்த பாவம் எல்லாம் சும்மா விடுமா என கேட்டு வருகின்றனர். மேலும் வனிதாவுடன் ஷெரின் சண்டை போடும் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இப்படிதான மதுமிதாவிடமும் சண்டைபோட்டு விரட்டியிருப்பாய் என்று டிவிட்டி வருகின்றனர்.

கர்மா இஸ் பூமராங்

கர்மா இஸ் பூமராங்.. உங்களுக்கான மருந்து இது கொண்டாடுங்கள் என்கிறார் இந்த நெட்டிசன்.

ஆனா ஷெரினுக்கு

ஸ்கெட்ச் கவினுக்கு நினைச்சேன்.. ஆன அந்த ஸ்கெட்சே உனக்கு தான்னு தெரியாம போச்சே ஷெரினு!! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

மதுமிதாவை கார்னர் செய்து

மதுமிதாவும் இப்படிதான் வேதனைப்பட்டிருப்பார். எல்லோரும் அவரை கார்னர் செய்து உச்சத்துக்கு கொண்டுபோய்விட்டீர்கள். அதனால் தான் சேரன் சாரை தவிர உங்கள் யாரிடமும் அவர் பேச விரும்பவில்லை என்று கூறினார். என்கிறார் இந்த நெட்டிசன்.

கண்ணீர் சும்மாவிடாது

மதுமிதாவோட கண்ணீர் சும்மாவிடாது.. உங்கள் எல்லோருக்கும் வனிதாவின் டோஸ் உண்டு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

உங்களுக்கு தெரியுமா?

எப்படிங்க ஃபுட்டேஜ் வரல, உடனே மதுமிதா தப்புன்னு சொல்றது. இந்த இனவெறி ஷெரினும் வனிதாவும் சேர்ந்துதான் மதுவ வெளிய அனுப்புனுங்கன்னு உங்களுக்கு தெரியுமா? என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

நன்றிகெட்ட ஷெரின்

ஷெரின் ஒரு மோசமான கேரக்டர், அவள் தர்ஷனை காதலிக்கிறாள் ஆனால் இன்னும் டீசன்ட்டை மெய்ன்டைன் பண்ணுகிறாள். ஆனா இந்த மாதிரி ரியாக்ட் பண்ண தேவை இல்லை. கவின் அவளை நாமினேட் செய்தபோது வனிதாதான் அவளுக்காக நின்றார். நன்றி கெட்ட ஷெரின் மதுமிதாவையும் இப்படிதான் பண்ணுச்சு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X