அந்த கவின எப்படியாவது வெளியே அனுப்புங்கய்யா.. முடியல.. செம கடுப்பில் நெட்டிசன்கள்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 18 : Promo 1: கவினை இனி தன்னிடம் பேசவேண்டாம் என்று சொல்லிய லோஸ்லியா

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினின் காதல் விளையாட்டை கண்டு நொந்து போயுள்ள ரசிகர்கள் அவரை எப்படியாவது வெளியேற்றுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் எப்போதும் பெண்களுடன் கடலை போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மச்சான் மச்சான் என அவர் பேசுவதும், மதுமிதாவிடம் மட்டும் அவர் எகிறுவதும் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

திருமணமான பெண்களான ரேஷ்மா, மதுமிதா ஆகியோரிடம் வேலையை காட்டாத கவின், சாக்ஷி, அபிராமி, ஷெரின், லாஸ்லியா ஆகியோரிடம் தான் கற்று வைத்துள்ள மொத்த காதல் வித்தையையும் காட்டி வருகிறார்.

உண்மையாக காதலிக்கவில்லை

உண்மையாக காதலிக்கவில்லை

அபிராமியுடன் நெருக்கமாக டைம் பாஸ்க்காக பழகிய கவின் கடைசியில் சாக்ஷியை காதலிப்பதாக கூறினார். ஆனால் கமல்ஹாசன் முன்பு யாரையும் உண்மையாக காதலிக்கவில்லை என்றார்.

சண்டை போட்ட சாக்ஷி

சண்டை போட்ட சாக்ஷி

இதனால் சாக்ஷி மட்டுமின்றி அவருடைய கேங்கும் அதிர்ச்சியடைந்தது. இதைத்தொடர்ந்து லாஸ்லியாவிடம் வான்ட்டடாக பேசி நெருங்க முயற்சித்தார் கவின். இதுதொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாக்ஷி கவினிடம் சண்டை போட்டார்.

ரசிகர்கள் ரசிக்கவில்லை

ரசிகர்கள் ரசிக்கவில்லை

இந்நிலையில் அந்த சண்டை இன்று வெளிப்படையாகவே பிக்பாஸ் வீட்டில் நடந்திருப்பது புரமோவில் தெரியவந்துள்ளது. கவின் கொஞ்சமும் அடங்காமல் பெண்கள் பின்னாடி சுற்றுவதை ரசிகர்கள் ரசிக்கவில்லை. மாறாக கழுவி ஊற்றி வருகிறார்கள் ரசிகர்கள்.

தீம் ஒரு கேடு

கவின் பண்றது ட்ரூ லவ் பாரு, அவனுக்கு "போ நீ போ" தீம் ஒரு கேடு என கோபப்படுகிறார் இந்த நெட்டிசன்.

சாக்ஷி டிராமா

இந்த சாக்ஷி தேவையில்லா டிராமா செய்கிறார். லாஸ்லியா அவரிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்கிறார் இந்த நெட்டிசன்.

முடியல

அந்த கவின முதல்ல எப்படியாச்சும் வெளியே அனுப்புங்கய்யா.. முடியல என்கிறார் இந்த நெட்டிசன்.

கதைச்சாலும் விளங்காது

சொல் புத்தி இருக்கனும். இல்ல, சுயபுத்தி இருக்கனும். எதுவுமே இல்லாத அவங்க கிட்ட நீ என்னத்த கதைச்சாலும் விளங்காது என லாஸ்லியாவுக்கு அட்வைஸ் கூறுகிறார் இவர்.

பொறமைல பொங்குறது

அடுத்தவங்க பேசுறத ஒட்டு கேக்குறதும் பொறாமைல பொங்குறதும் தான் சாக்ஷியோட கேவலமான புத்தி என திட்டுகிறார் இந்த நெட்டிசன்.

பின்னாடியே சுத்துறான்

எத்தனை தடவ விரட்டி விட்டாலும் பின்னாடியே சுத்துறான்.. என கவினை திட்டி பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஏன் சண்டையை மூட்டி விடுற?

எப்ப பாரு மூஞ்ச தூக்கீட்டு வெச போத்தல் சாக்ஷி.
அதான் கவின் கண்டுக்கலல்ல அப்புறம் நீயும் அபிராமி மாதிரி வேற ஒருத்தர் பின்னால போக வேண்டியது தானே..
சும்மா லாஸ்லியா கவினுக்குள்ள சண்டைய மூட்டி விடுற என்கிறார் இவர்.

நீ அதிகமா அங்கதான் இருக்க

அடேய் கவின் பேசாம உன் பெட்டை பாத்ரூம்ல கொண்டு போய் போடுடா ஏனனா அங்க தான் நீ அதிகமா இருக்க என கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X