மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய லாஸ்லியா.. கால் மேல் கால் போட்டு ஆட்டியபடியே கமலுக்கு பந்தாவாக பதில்!
Recommended Video
சென்னை: கமல் முன்பு கால் மேல் கால்போட்டு ஆட்டியபடியே திமிராக பதில் சொன்ன லாஸ்லியாவை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கடந்த வாரம் நடைபெற்ற சாயம் வெளுத்து போச்சு டாஸ்க் குறித்து பேசினார் கமல்ஹாசன். அப்போது யாருக்கு யார் என்ன காரணம் கூறி நிறத்தை ஊற்றினார்கள் என்பது குறித்து விவாதித்தார்.
அப்போது கமலின் கேள்விக்கு கால் மேல் கால் போட்டுக்கொண்டும் அதனை ஆட்டியபடியும் மிகவும் திமிராக பதில் சொன்னார் லாஸ்லியா. பெரிய செலிபிரிட்டி போல் பாடி லாங்குவேஜை வெளிப்படுத்தி கமலிடமே ஷோல்டரை தூக்கி பந்தாவாக பேசினார் லாஸ்லியா.

கால் மேல் கால்போட்டு
லாஸ்லியாவின் நடவடிக்கையை கண்ட பார்வையாளர்கள் அவரை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர். ஏற்கனவே லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது கமல் சார் முன்பு கால் மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டிருக்காதே என அறிவுரை கூறினார்.

அரோகென்ட்
ஆனால் அதனை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாத லாஸ்லியா நாளுக்கு நாள் மிக மோசமாக நடந்துகொள்கிறார். நாளுக்கு நாள் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது. அதிக ஆட்டிட்யூட் காட்டி வந்த லாஸ்லியா தற்போது அரோகென்ட்டாகவும் மாறிவிட்டார் என்கின்றனர் நெட்டிசன்கள்.
முழுக்க ஆட்டிட்யூட்
இந்த லூஸ்லியா திரும்பவும் கால் மேல கால் போட்டு கமல் முன்னாடி ஆட்டிக்கிட்டு ரொம்ப ஆட்டிட்யூட் காட்டுது. இது கம்ஃபர்ட்டுக்காகங்ற மாதிரி தெரியல, முழுக்க ஆட்டிட்யூட் தான். நிஜ உலகுக்கு வரும் போது இதனை கடுமையான வழியில் உணருவாள். அவளை மக்கள் கேவலமாக ட்ரீட் செய்வார்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
மோசமான போட்டியாளர்
லாஸ்லியா ஆட்டிட்யூடில் இருந்து அரோகென்ட்டாக மாறிவிட்டாள். பிக்பாஸ் சீசன்லயே மிகவும் மோசமான போட்டியாளர் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இவ்ளோ ஆட்டிட்யூட் உனக்கு?
லாஸ்லியா ஏம்மா இவ்ளோ ஆட்டிட்யூட் உனக்கு என்று கேட்கிறார் இவர்.
குட்லக் லாஸ்லியா
லாஸ்லியா நீ கமல்ஹாசன் முன்னால் கால் மேல் கால் போட்டு ஆட்டிக்கொட்டிருப்பதை பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. உங்க அப்பா சொன்னப் பிறகும் கூட அதை நீ கேட்கல. நான் ஒத்துக்குறேன் கமல் கூட சொன்னார். இதுவே உங்க அப்பா மேல உனக்கு உள்ள மரியாதையை காட்டுது.. குட்லக் லாஸ்லியா.. முழுக்க முழுக்க ஆட்டிட்யூட் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஆட்ட வேற செய்யுறா
லாஸ்லியா.. கால் மேல கால் போட்டு இருக்கறது மட்டுமில்லாம.. அதை ஆட்ட வேற செய்யுறா.. ஆட்டிட்யூட் என்கிறார் இந்த நெட்டிசன்.
என்ன ஒரு திமிரு
கமல் சார் கேள்விக்கு அவள் பதில் சொன்ன விதத்தை பாருங்க.. என்ன ஒரு பந்தா.. கால் மேல கால் போட்டு காலை ஆட்டிக்கிட்டு என்ன ஒரு திமிரு.. என்ன ஒரு ஆட்டிட்யூட்.. வாவ்.. இவ்ளோ நடந்தும் கொஞ்சம் கூட மாறல.. ம்.. கண்டிப்பா இவ்ளோட அப்பா இதை பார்த்துட்டு வருத்தப்படுவாரு என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











