எம்மா வனிதா.. இது வாயா.. இல்ல.. இது என்ன வாய்னு கேக்குறேன்! கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் தேவையில்லாமல் சண்டையை மூட்டிவிட்ட வனிதாவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமார் தொடக்கம் முதலே கொளுத்தி போடுபவராகவும் சண்டை மூட்டி விடுபவராகவும், சண்டைக் கோழியாகவும்தான் இருந்து வருகிறார்.
பிக்பாஸ் அவருக்கு எத்தனை வாய்ப்பை கொடுத்தாலும் திருந்துவதாக தெரியவில்லை. மற்றவர்களுடன் சண்டை போடுவதையும் மற்றவர்களை தவறாக சித்தரிப்பதையுமே தலையாய பணியாக செய்து வருகிறார்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
இதுவரை இரண்டு முறை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள வனிதாவுக்கு மூன்றாவது முறையாக நேற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நேற்றும் தர்ஷன் வெளியேறியதற்கு ஷெரின் தான் காரணம் என கூறி தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கினார். இதனால் கடுப்பான நெட்டிசன்ஸ் அவரை கழுவி ஊற்றினர்.
இது வாயா..
எம்மா வனிதா பிக் பாஸ் ஆரம்பிக்கும் போது பிரச்சனை முடியபோற நேரமும் பிரச்சனை. இது வாயா இல்ல இது என்ன வாய்னு கேக்குறேன். என்கிறார் இந்த நெட்டிசன்.
என்ன ஒரு ஜென்மம்டா
கொடுக்குற காசுக்கு ஒழுங்கா பர்ஃபார்ம் பண்ணுறது வனிதா மட்டும்தான்.. என்ன ஒரு ஜென்மம்டா என்கிறார் இந்த நெட்டிசன்.
எரிச்சலா இருக்கு
புரயோஜனமே இல்லாத பொம்பள.. தேவையில்லாத சண்டை.. ரொம்ப எரிச்சலா இருக்கு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
மாடர்ன் சகுனி
வனிதா- மாடர்ன் டே சகுனி... என்று கூறுகிறார் இவர்.
தேவையே இல்லாத ஒன்னு
வனிதா செஞ்சது ரொம்பவும் முட்டாள்தனமான ஒன்னு.. இப்போதைக்கு அது தேவையே இல்ல.. என்கிறார் இந்த நெட்டிசன்.
தேவையில்லாத ஆணி
வனிதா இப்ப பிக்பாஸ் வீட்டில தேவையே இல்லாத ஆணி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அன்னபோஸ்டா ஜெயிச்சிருக்கும்
பிக்பாஸ் சீசன் 3 வனிதா முழு எபிசோடும் இருந்திருக்கனும். எல்லாரும் சுவர் ஏறி குதிச்சி ஓடிருப்பானுக. அன்னபோஸ்டா ஜெயிச்சிருக்கும் என்று கூறுகிறார் இவர்.
ஃபுல்லா பொறாமை
வனிதா எல்லாத்தையும் இழந்துட்டா.. ஃபுல்லா பொறாமையில இருக்கா என்று கூறுகிறார் இவர்.
ஜீரணிக்க முடியல
வனிதா சூனியக்காரியால ஷெரின் ஃபைனலிஸ்ட் ஆனத ஜீரணிக்க முடியல.. ஷெரின் பேர கெடுக்க முயற்சி பண்றா என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











