பிக்பாஸ் டைட்டில் வின்னர் கவின்தான்.. கொடுக்கப்போகும் ட்ரோஃபி இதுதான்! வைரலாகும் போட்டோ!

Recommended Video

Bigg Boss 3 Tamil:கவின் லொஸ்லியாவிற்கு கிளம்பும் Support

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் வெற்றி பெற்றால் வழங்கப்படும் ட்ரோஃபி இதுதான் என ஒரு போட்டோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடைந்துவிடும். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நேர்மையாக நடைபெறவில்லை என பேச்சு எழுந்து வருகிறது.

கண்டுகொள்ளாத பிக்பாஸ்

கண்டுகொள்ளாத பிக்பாஸ்

நிகழ்ச்சியின் தொடங்கிய இரண்டாவது வாரத்தில் இருந்தே கவினை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத பிக்பாஸ் அவரை நிகழ்ச்சியின் இறுதி வரை கொண்டு வந்துவிட்டார்.

விதியை மீறியபோதும்

விதியை மீறியபோதும்

நேர்மையாக விளையாடிய ஃபாத்திமா பாபு, சேரன் உள்ளிட்டோரை அதிரடியாக வெளியேற்றிய பிக்பாஸ் கவினை மட்டும் வாரா வாரம் காப்பாற்றி வருகிறார். விதியை மீறி மைக்கில் இருந்து பேட்டரியை கழற்றிவிட்டு பேசியபோதும் கூட கவினை வெளியேற்றவில்லை பிக்பாஸ்.

மனம் வரவில்லை

மனம் வரவில்லை

தான் பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக பெண்களின் உணர்வுகளோடு விளையாடியதை அவரே ஒப்புக்கொண்ட போதும் கூட அவரை வெளியேற்ற பிக்பாஸ்க்கு மனம் வரவில்லை. சரவணன் எப்போதோ செய்த தவறை கூறியதற்காக அவரை கண்ணைக் கட்டி வெளியேற்றினார் பிக்பாஸ்.

டாஸ்க் செய்வதில்லை

டாஸ்க் செய்வதில்லை

ஆனால் கவின் செய்யும் தவறுகளை ஏன் பிக்பாஸ் கவனிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. கவின் இதுவரை பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட எந்த டாஸ்க்கையும் ஒழுங்காக செய்ததில்லை.

கவினுக்கு தான் டைட்டில்

கவினுக்கு தான் டைட்டில்

கவினை விஜய் டிவியின் புராடெக்ட் என்ற ஒரே காரணத்தினால்தான் பிக்பாஸ் காப்பாற்றி வருகிறார் என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்படியே கவினை காப்பாற்றி அவருக்குதான் பிக்பாஸ் டைட்டிலை கொடுக்கப்போகிறார் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதுதான் அந்த ட்ரோஃபி

கவினுக்கு டைட்டிலை கொடுக்க பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ள நெட்டிசன்ஸ், இதுதான் கவினுக்கு வழங்கப்படவுள்ள ட்ரோஃபி என ஒரு இமேஜை ஷேர் செய்துள்ளனர். அந்த இமேஜ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாத்ரூமில் கவின்

பாத்ரூமில் கவின்

கவின் காப்பாற்றப்படும் விரக்தியில் இப்படி ஒரு போட்டோவை வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்ஸ். கவின் எப்போதும் பாத்ரூமுக்குள்ளேயே உட்காந்திருக்கிறார். மேலும் எந்த பெண் பாத்ரூமுக்கு சென்றாலும் பின்னாடியே செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கிண்டல் ட்ரோஃபி

கிண்டல் ட்ரோஃபி

இதனால் அவரை சமூக வலைதளங்களில் கக்கூஸ் கவின் என்று குறிப்பிடுகின்றனர். அதனை அடிப்படையாக வைத்தே நெட்டிசன்கள் இப்படி ஒரு ட்ரோஃபியை கிண்டலாக உருவாக்கியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X