Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடுத்து எங்கே... பாத்ரூம்லேயா ஆண்டவரே.. பிக்பாஸ் புரமோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த புரமோ எங்கு? என கேட்டு கலாய்த்து தள்ளியுள்ளனர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை நிறைவு செய்துள்ளது.
ஹாட்ரிக்
தோல்வி..
வெறுப்பேற்றும்
வெரைட்டி
நடிகர்..
உச்சகட்ட
கோபத்தில்
தயாரிப்பாளர்கள்!
வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாக தொடங்கியது.

கொரோனா இரண்டாவது அலை
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூன் மாதத்திலேயே தொடங்க நிகழ்ச்சி குழு முடிவு செய்தது. அதற்கான வேலைகளும் தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவது தாமதமானது.

இறுதியான போட்டியாளர்கள் பட்டியல்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபரில் தொடங்கும் என கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 3 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படலாம் என தகவல் பரவி வருகிறது. பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியலும் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் பரவி வருகிறது.

கல்யாண வீட்டில் கலாட்டா
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோக்களும் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. முதலில் பிக்பாஸ் லோகோ புரமோ வெளியானது. அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோ வெளியானது. இதில் கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை பிக்பாஸ் வீட்டோடு தொடர்புப்படுத்தி பேசியிருந்தார் கமல்.

பெட் ரூமில் படுத்தப்படி
அதனை தொடர்ந்து கிச்சனில் இருந்து பேசியிருந்தார் கமல். தாளிச்சு கொட்டி இறக்குர வரைக்கும் என சமையல் செய்து கொண்டே பேசினார் கமல். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ நேற்று வெளியானது. இதில் பெட்ரூமில் பெட்டில் படுத்திருக்கும் கமல், பெண்கள் கிசுகிசு என பேசும் குரலை கேட்டு யாருங்க அது என்கிறார்.

பூனைக்குட்டி போல போர்வைக்குள்
பின்னர் கமல் பேசும் போது ஆண் ஒருவர் யாருங்க அது கிசுகிசுன்னு பேசுறது என்று அதட்டுகிறார். இதனைக் கேட்ட கமல் இந்த வீட்டில் கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல என கூறிக்கொண்டு பூனைக்குட்டி போல போர்வைக்குள் செல்கிறார். இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

முதல் சீசன் போல வருமா?
அந்த வகையில் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், முதல் சீசன் போல வருமா ?... ஆண்டவரே! என கேட்டுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர், பெண்கள் பேசும் கிசுகிசுவான கல்யாணம் என்னவோ நல்லாதான் நடந்தது ஆனா அந்த மாமியார் பண்ண கலாட்டா அல்டிமேட் என பதிவிட்டுள்ளார்.

இந்த தடவையாவது வேலை வாங்குங்க..
மற்றொரு நெட்டிசனான இவர், விஜய் டிவி கிரியேட்டிவ் டீம் இந்த தடவையாவது பக்காவா வேல வாங்குங்க .. இல்லன்னா சர்வைவ் பண்ண முடியாது. சும்மா சும்மா அழு முஞ்சி டாஸ்க் பந்து பொருக்கி போடறது, நோகாம உக்காந்து நுங்கு தின்றதுன்னு டாஸ்க் வச்ச .. மவனே சங்கு தான் என கிண்டலாக கலாய்த்துள்ளார்.

எப்படி கொண்டு போக போறீங்க?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ப்ரோமோ எல்லாம் இந்த முறை பரவா இல்லை ஆனா நிகழ்ச்சி எப்படி கொண்டு போக போறீங்க என விஜய் டிவியை கேட்டுள்ளார். மேலும் இது கமல் சார் ஓட கடைசி சீசன் சோ கொஞ்சம் சொதப்பாம பண்ணுங்க என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸ் போடுங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அட போங்க.. நீங்க இப்படி தான் சொல்றீங்க.. அங்க கிசுகிசுன்னு நல்லா பேசுறாங்க.. நீங்கதான் ஸ்ட்ரிக்ட்டா ரூல்ச போடுறீங்க இல்ல என ரூல்ஸ் டம்மியாக இருப்பதாக கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

கொஞ்சம் டாஸ்க் பத்தியும் யோசிங்க
புரமோவுக்கு யோசிக்கிற நேரம் கொஞ்சம் டாஸ்க் பத்தியும் யோசிச்சு வையுங்க.. என கூறியுள்ளார். மற்றொரு ரசிகரான இந்த நெட்டிசன், புரமோ எல்லாம் நல்லா தான் இருக்கு.. இந்த புரமோவை நம்பி பார்க்கலாமா ஆண்டவரே என கேட்டுள்ளார்.

புரமோ மட்டும் போட்டா எப்படி?
மற்றொரு நெட்டிசனான இவர், இப்படி புரமோ மட்டும் போட்டா எப்படி.. வேகமா நிகழ்ச்சியை ஆரம்பியுங்கள் என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகரான இவர், வேற மாதிரி புரமோ.. பிக்பாஸ் சீசன் 5க்காக மரண வெய்ட்டிங் என கூறியுள்ளார்.

ப்ளீஸ் பிஸிக்கல் டாஸ்க் கொடுங்க
பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாட்டு போட்டி கோலம் போட்டி தோசை சுடுற போட்டி மிக்சர் சாப்டுற போட்டியில வச்சீங்கன்னா இந்த டைம் சேனல் மாத்திட்டு போறதுக்கு ஆப்ஷன் இருக்கு எங்களுக்கு.. ப்ளீஸ் பிஸிக்கல் டாஸ்க் கொடுங்க.. கடைசி ரெண்டு சீசன்ஸ் டாஸ்க் விஷயத்துல எங்கள ரொம்ப காண்டாக்கிட்டீங்க.. குறிப்பா பாட்டு போட்டி.. என பதிவிட்டுள்ளார்.

அடுத்து எங்க பாத் ரூம்மா?
பிக்பாஸ் புரமோக்களை பார்த்த இந்த நெட்டிசன், மூன்று புரமோக்களுமே வழக்கமாக வெளியாகும் புரமோக்களில் இருந்து மாறுபட்டுள்ளது.. கமல் சாருக்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதனிடையே பிக்பாஸ் புரமோக்களை பார்த்த சில நெட்டிசன்கள் அடுத்து என்ன பாத்ரூம்மிலிருந்து பேசப் போகிறீர்களா என்று கேட்டும் பங்கம் செய்து வருகின்றனர். ஏற்கனவே கல்யாண வீடு, கிச்சன் என புரமோக்கள் வெளியானதால் நெட்டிசன்கள் இப்படி கேட்டு வருகின்றனர்.