மனசு வலிக்குது ஹவ்வா.. ஹவ்வா.. இது என்ன சாக்ஷிக்கு புதுசா? நெட்டிசன்ஸ் மரண பங்கம்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விருந்தாளியாக பங்கேற்று அசிங்கப்பட்ட சாக்ஷியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாக்ஷி வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் விருந்தாளிகளாக வந்தனர்.
இந்நிலையில் இன்றைய புரமோவில், பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த சாக்ஷியை மேடைக்கு அழைத்த கமல், அவர் மாற்றி மாற்றி பேசியதற்காக அவருக்கு பாடம் நடத்துகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சாக்ஷிக்கு புதுசா?
மாத்தி மாத்தி பேசுறது என்ன சாக்ஷிக்கு புதுசா?? இதுக்கு பேர்தாம்மா பச்சோந்தி தனம். இடத்துக்கு தகுந்த மாதிரி பேசுறது!
என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
போச்சா
என்னப்பா ஹேட்டர்ஸ்.. சாக்ஷி உள்ள வந்தா கவிலியாவ கிழி கிழின்னு கிழிப்பான்னு சொன்னிங்க ஆனா இப்போ சாக்ஷியோட முகத்திரையே கிழிஞ்சி தொங்குது.. உங்க கடைசி அஸ்திரமும் போச்சா என்று கேட்கிறார் இவர்.
பிற்பகல் விளையும்
மதுமிதாவ இவங்க படுத்திய பாட்டுக்கு இப்ப எல்லாரும் அனுபவிக்கிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஹவ்வா ஹவ்வா..
மனசு வலிக்குது ஹவ்வா.. ஹவ்வா.. என்று கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்.
கடுப்பா வருது
நாங்க தகுதி இல்லனு வெளியே அனுப்பியவரை மறுபடி கூப்பிட்டு வந்து க்ளாஸ் எடுக்கறது எல்லாம் நியாயமா? கடுப்பா வருது இப்ப உங்க மேலதான்! என்று கூறுகிறார் இவர்.
பச்சோந்தி பட்டம்
உண்மையான பச்சோந்தி இந்த சாக்சிதான் இந்த லட்ச்சனத்தில மத்தவங்களுக்கு பச்சோந்தி பட்டம் குடுக்குது என்கிறார் இவர்.
தேவையா உனக்கு?
பச்சோந்திக்கு ஏத்த பச்சை டிரெஸ். இந்த அவமானம் உனக்கு தேவையா? என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
பல்ப் வாங்குற வல்லமை
கெஸ்ட்டா வந்தும் பல்ப் வாங்குற வல்லமை படைத்தவங்கடா எங்க தலைவி சாக்ஷி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அந்த பக்கம் திரும்புயா
அட ஆண்டவரே, யாரிடம் கேள்வி கேட்க சொன்னால், நீற் யாரிடம் கேட்டிருக்க. அந்த பக்கம் திரும்புயா கக்கூஸ், சகுனி, பச்சோந்தி எல்லாம் இருக்கு, நல்லா பாரு என்று கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











