அறை வாங்கும் போது மட்டும் கண்ணாடியை காணோம்.. என்னா ஒரு பிளானிங்.. இதவிட வேறன்ன புரூஃப் வேனும்?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினை இன்று அவரது நண்பர் அறைவது போன்று காண்பிக்கப்படுவது திட்டமிட்ட நாடகம் என சாட்சியுடன் கூறியுள்ளர் ரசிகர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவே பட்டையை கிளப்பியது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கவினின் நண்பர், கவின் செய்த தவறை சுட்டிக்காட்டி பட்டென ஓங்கி அறைந்தார்.
பிக்பாஸ் கவினுக்கு ஃபிரீஸ் சொன்னபோது அவரது நண்பர் இந்த சம்பவத்தை அரங்கேற்றினார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இது எல்லாம் நாடகம், கவினை காப்பாற்றவே விஜய் டிவி இப்படி ஒரு சீனை கிரியேட் செய்துள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கண்ணாடியை காணோம்
இந்நிலையில் இது நாடகம்தான் என்பதற்கு வேறு என்ன புரூஃப் வேண்டும் என்று கேட்டு ஒரு காட்சியை நினைவுப்படுத்தியுள்ளனர். அதாவது, எப்போதும் கண்ணாடியுடனே இருக்கும் கவின், தற்போது தனது நண்பர் அடிப்பதற்கு முன்பாகவே கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு கன்னத்தை காட்டுகிறார் என கூறுகின்றனர்.

என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள்?
இதில் இருந்தே தெரிகிறது, இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என, என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கவினை காப்பாற்ற இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பக்கா நாடகம்
கவின் அடிவாங்குறப்ப மட்டும் கண்ணாடியை கழட்டிகிட்டான். பக்கா நாடகம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கேவலாமான பிளானிங்
கேவலமான பிளானிங். கடைசில அடிவாங்குனது நான் தான் கப் எனக்குத்தான்ற மாரி டைட்டிலயும் குடுத்துடுங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கவினுக்கு மூஞ்சில
போன சீசன்ல ரித்திவிக்கா கையில பச்சைகுத்தி டைட்டில் கொடுத்தீங்க. இந்த சீசன்ல கவின மூஞ்சுல குத்தி டைட்டில் கொடுக்க போறீங்க.. அதானே #பிக்பாஸ் என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

கவினுக்கு ஒரு நியாயம்
சரவணன் சிறு வயதில் செய்த தவறை சுட்டிக்காட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றினர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். ஆனால் தனது சுயநலத்துக்காக 4 பெண்களின் உணர்வுகளோடு விளையாடிய கவினை மட்டும் வெளியேற்றாமல் விஜய் டிவி காப்பாற்றி வருகின்றது என மக்கள் கருத்து கூறி வருகின்றனர்.

விஜய்டிவியின் ஏற்பாடு
இந்நிலையில் இன்று கவினுக்கு விடப்பட்ட அறையும் ஒரு டிராமாதான் என்றும், நாமினேஷனில் உள்ள அவருக்கு மக்கள் பரிதாப்பட்டு ஓட்டுப்போட வேண்டும் என்பதற்காகவே விஜய் டிவி இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











