ஹோட்டல் ரூமில் கட்டிப்புரண்டு அட்டகாசம்..நடுவிரலை காட்டி வரம்பு மீறிய ஷாலினி - சுனிதா!
சென்னை: சின்னத்திரை பிரபலங்கள் தங்களை எப்போதுமே லைம்லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் அவர்கள் செய்யும் சில விஷயம் முகம் சுளிக்கும் அளவில் இருக்கும். அப்படி ஒரு அநாகரிகமான ஃபோட்டோஷூட்டை நடத்தில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள் நடிகை ஷாலினியும், 'குக் வித் கோமாளி' சுனிதாவும்.
நடிகை ஷாலினி: 'முள்ளும் மலரும்' சீரியல் மூலம் பிரபலமாகி நெகட்டிவ் விமர்சனங்களை பாசிட்டிவாக மாத்தி, தனிப்பட்ட வாழ்க்கையில ஜெயிச்சு காட்டியவர் நடிகை ஷாலினி. அதேபோல, குக் வித் கோமாளி ஷோ மூலமா தமிழ் ரசிகர்களின் செல்லப் பிள்ளையா இருப்பவர் தான் சுனிதா. இவங்க ரெண்டு பேரும் தங்களோட 'நெருக்கமான' நட்பை காட்டுறதுக்காக ஹோட்டல் ரூமில் நடத்திய போட்டோஷூட் சர்ச்சையில் கிளப்பி இருக்கு.

நடுவிரலை காட்டி அநாகரிகமா: பாத்ரோப் கட்டிக்கிட்டு, தலையில டவலை சுத்திக்கிட்டு பெட்ல கட்டிப்புரண்டு, பாத் டப்பில் ஒண்ணா உக்காந்து ஒயின் கிளாஸை கையில் போஸ் கொடுத்து இருக்காங்க, இதெல்லாம் கூட ஃபேஷன், மாடர்ன் லைஃப்ஸ்டைல்னு கடந்து போயிடலாம். ஆனா, ஃபோட்டோஷூட்டின் உச்சகட்ட கொடுமையா? ரெண்டு பேரும் பெட்ல முட்டிப்போட்டு உக்காந்து, கேமராவை பார்த்து தங்களோட நடுவிரலை காட்டி வக்கிரமான பாணியில் போஸ் கொடுத்திருக்காங்க.

நெட்டிசன்கள் கேள்வி: இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் கடுப்பாகி உங்க தனிப்பட்ட சுதந்திரம், நட்பு எல்லாமே ஓகே தான். லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ் வச்சிருக்க நீங்க, பொதுவெளியில இப்படி ஒரு ஆபாசமான, அநாகரிகமான சைகையை காட்டுவது தான் மாடர்ன் கலாச்சாரமா? என்றும், லைக்ஸ் வாங்கணும், சோஷியல் மீடியால ட்ரெண்ட் ஆகணும்னா இப்படித்தான் வரம்பு மீறி நடக்கணுமா? என இவங்களோட மோசமான அணுகுமுறையை விமர்சித்து வருகின்றனர். சுனிதா தனக்கு இருந்த நல்ல பெயர் இந்த 'நடுவிரல்' சர்ச்சையின் எடுத்துக்கொண்டார் என்பது தான் உண்மை.


Click it and Unblock the Notifications