அபிராமி பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததில் இருந்து செஞ்ச ரெண்டு வேலை.. ஒன்னு லவ்வு இன்னொன்னு சண்டை!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் அபிராமியை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அபிராமி, முதல் நாளில் இருந்தே ஓவராக சீன் போட்டு வருகிறார். அவரது நடவடிக்கை கொஞ்சமும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் முகெனும் நானும் ஃபிரென்ட்ஸ் தான். முகென் மீது காதல் வந்தால் நேராக சொல்லிவிடுவேன்.

முகெனுடன் நெருக்கம்
எவளுக்காவது பிரச்சனை என்றால் கண்ண மூடிக்கிங்க. எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க என்று கோபமாக கூறுகிறார். ஏற்கனவே கவினுடன் காதல் என்று கன்டென்ட் கொடுத்த அபிராமி தற்போது முகெனுடன் நெருக்கமாகியுள்ளார்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
அபிராமியின் இந்த செயல்களை பார்த்து அலுத்து போய்விட்டனர் ரசிகர்கள். இதனால் சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
ரெண்டு வேலை
முதல் நாள் கவின் மீது க்ரஷ்.. இரண்டாம் நாள் கவினுடன் காதல்.. மூன்றாம் நாள் முதல் கவினுடன் தொடர்ந்த காதல்.. ஆறாம் நாள் பிரேக்கப்... 7ஆம் நாள் முகென் பட்டி.. 8ஆம் நாள் பாட்டிலை குழந்தையாக பயன்படுத்தினாள்.. 10 ஆம் நாள் காதலித்தால் நேராக சொல்லிவிடுவேன்.. டியர் அபிராமி நீங்க வந்ததுலேருந்து செஞ்ச ரெண்டு வேலை காதல் மற்றும் சண்டை. என்கிறார் இவர்.
முட்டாளாக்கி கொள்கிறாள்
அவளை அவள் முட்டாளாக்கி கொள்கிறாள்.. என்கிறார் இந்த நெட்டிசன்.
உன்னைப்போல் கிடையாது
அபிராமி நீ முகெனிடமிருந்து விலகியே இரு, அவர் ஒரு அப்பாவி.. உன்னைப் போல் கிடையாது.. என்கிறார் இவர்.
முகென அட்மிட் பண்ணு
அபிராமி: பழைய பேஷன்ட் கவின டிஸ்சார்ஜ் பண்ணு.. புது பேஷன்ட் முகென அட்மிட் பண்ணு. என்கிறார் இவர்.
முகென் மாட்டிக்கிட்டான்
அய்யோ கவின் நீ இல்லாமல் உன் அபிராமிக்கு காதல் பைத்தியம் கூடிருச்சு.. அப்பாவி முகென் மாட்டிக்கிட்டான். என்கிறார் இவர்.
தள்ளியே இரு
முகென் அந்த அபிராமிக்கிட்ட இருந்து தள்ளியே இரு.. என்கிறார் இந்த நெட்டிசன்.
அகங்காரம் கூடாது
ஆம்பளைங்க எப்படி சைலண்டா இருக்காங்க! பொம்பளைகளுக்கு அடக்கம் வேணும்! அகங்காரம் இருக்ககூடாது!


Click it and Unblock the Notifications











