பச்சோந்தி.. முதலைக் கண்ணீர்.. முகென் என்ன உன் சொத்தா? அபிராமியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகென் மீது ஓவர் பொஸஸிவ்வாக இருக்கும் அபிராமியை நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி முகெனை ஒரு தலையாக காதலித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்குள் முகெனை எப்படியாது மடக்கி விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் அபிராமி.

ஆனால் முகென், அபிராமியிடம் தான் நட்பாகதான் பழகி வருவதாக ஒவ்வொரு முறையும் நடுமண்டையில் அடிப்பது போல் சொல்லி வருகிறார். மேலும் தனக்கு மலேசியாவில் கெர்ள் ஃபிரன்ட் இருக்கிறார் என்றும் கூறிவிட்டார் முகென்.

முதலில் கவின்

முதலில் கவின்

ஆனாலும் உலகமே இந்த நிகழ்ச்சியை பார்க்கிறது என்பதை அறிந்தும், அபிராமி முகென் மீதான காதலை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடனே கவின் மீது காதல் என்ற அவர், பின்னர் முகெனை காதலிக்க தொடங்கிவிட்டார்.

இன்றைய புரமோ

இன்றைய புரமோ

முகென் காதல் இல்லை நட்புதான் என்று தெளிவாக கூறிய பிறகும் அவரையே சுற்றி சுற்றி வரும் அபிராமி, முகென் மீது ரொம்பவும் பொஸஸிவ்வாக உள்ளார். இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் முகெனும் சாக்ஷியும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

கதறும் அபிராமி

கதறும் அபிராமி

அப்போது முகெனுடன் நான் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா என்று சாக்ஷி கேட்க, உடனே கோபமாக எழுந்து செல்கிறார் அபிராமி. பின்னர் லாஸ்லியாவிடம் இதுகுறித்து பேசும் அபிராமி, முகென் தன் பின்னால் வரவில்லை என்று கூறி அழுகிறார்.

கடுமையாக டிவிட்டியுள்ளனர்

கடுமையாக டிவிட்டியுள்ளனர்

அபிராமியின் இந்த நடவடிக்கையை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் காரித்துப்பியுள்ளனர். மேலும் கண்டமேனிக்கு திட்டியும் கடுமையாக டிவிட்டியுள்ளனர் நெட்டிசன்கள்.

முகென் என்ன உன் சொத்தா?

ஹே.. அபிராமி, முகென் என்ன உன் சொத்தா? அவன் யார் கூட வேண்டுமானாலும் பேசுவான், பழகுவான், அவனுக்கு ஒபினியன்ஸ் இருக்கு! இதுக்கு ஏன் இப்ப சீன் போடுற நீ? இப்படி ஒப்பாரி வைக்குற அளவுக்கு இது பெரிய விஷயமா? ஏன் நீ பிக்பாஸ்க்கு போன? விளையாடவும் இதுபோன்ற தேவையில்லாத சீன் போடவும்தானா? எரிச்சலா இருக்கு, உன்னை முதலில் எலிமினேட் பண்ணனும். முதலைக்கண்ணீர் விடாதே என்று காட்டமாக கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஓவரா பண்ணாத

ஏய் பச்சோந்தி அபி, முகென் உனக்கு மட்டும் ஃபிரன்ட் இல்ல. ரொம்ப ஓவரா பண்ணாத என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பார்த்தாலே எரியுது

அபிராமி நீ ஒன்னும் குழந்தை இல்லை. முகென் இங்கே ஒரு காரணத்திற்காக வந்திருக்கான். உன்கூட வழியறதுக்கு இல்ல. உன் மூஞ்ச பார்த்தாலே எரியுது என்கிறார் இந்த பார்வையாளர்.

சேஃப் கேம் ஆடுறா

முகென வச்சு நல்லா சேஃப் கேம் ஆடுறாம்மா இந்த அபிராமி என்று கூறுகிறார் இவர்.

முகெனின் பலவீனம்

அபிராமி உருவாக்கியுள்ள இந்த அனுதாபம் மற்றும் பொஸஸிவ்வில் இருந்து முகென் வெளியே வரவேண்டும். முகென் எப்போதும் அவளுடன் இருக்க வேண்டும் என அவள் எதிர்பார்க்கக்கூடாது. முகெனை தனியாக விளையாட விடவேண்டும், முகெனின் பலவீனமான அன்பை காட்டி அவனை பயன்படுத்திக்கொள்கிறாள் அபிராமி என்று கூறுகிறார் இவர்.

வளர்ப்பு சரியில்லை

அடியே பைத்திம் புடிச்ச அபிராமி ஒரு பையன் இதைவிட தெளிவா எப்படி சொல்லனும். மற்றவங்க உணர்வுக்கு மரியாதை கொடு எதுக்கு இப்படி அலையிற? உன் வளர்ப்பு சரியில்லை என கண்ட மேனிக்கு திட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X