ஓயோ ரூமா?.. அடங்காத பாரு - கமருதீன்.. விஜய் சேதுபதியை இப்படி மாத்திட்டீங்களே? கடுப்பான ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ஐ இதற்கு மேல் தரக்குறைவாக கொண்டு செல்ல வேறு எதுவும் தேவையில்லை. மலையாள பிக்பாஸிலாவது ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரை முத்தமிட்டதை நான் பார்த்தேன் என்று குற்றம் சுமத்த, அதை மோகன் லால் வீக் எண்டில் கேள்வியாக கேட்டு, அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை, தேவையில்லாத குற்றத்தை சொல்லாதீர்கள் என்று மன்னிப்பு கேட்க வைத்தார். ஆனால் தமிழ் பிக்பாஸில் அதற்கும் வழி இல்லை.
அதாவது போட்டியாளர்களில் சிலர் இந்த சீசனின் தொடக்கத்தில் சில ஆட்சேபனைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வியாக முன்வைத்தபோது, சேனலை மாற்றி கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சீசன் மிகவும் மோசமாக சென்று கொண்டுள்ளது என்பதை உணர்ந்த பின்னர் போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல இந்த சீசன் மொத்தமாகவே பிக்பாஸ் குழுவினருக்கு பெரிய அழுக்கு அல்லது வடு என்று சொல்லலாம்.
சக போட்டியாளர்களின் நேர்மறையான விமர்சனங்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை, விஜய் சேதுபதி சுட்டிக் காட்டினால், அவரிடத்தில் சாரி என நீட்டி இழுத்துச் சொன்னால் போதும், இல்லை என்றால் அவமானப்படுவது போல முகத்தை வைத்துக் கொண்டால் போதும் அவரை சிங்கிள் கேண்டில் டீல் செய்து விடலாம். பிக் பாஸ் பலமுறை சொன்னாலும், எனக்கு நீ எல்லாம் ஒரு ஆளே இல்லை என்ற மனநிலையில் அவர் சுட்டிக் காட்டிய தவறை மீண்டும் மீண்டும் செய்வது என்பது வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்குமே கடுப்பைக் கொடுக்கிறது. இப்படியான நடவடிக்கைகளை கமருதீனும் பார்வதியும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

பார்வதி & கமருதீன்: இந்நிலையில் கோர்ட் டாஸ்க் முடிந்து வெளியே வரும்போது கமருதீனும் பார்வதியும் ஏக்டிவிட்டி ஏரியாவின் கதவுக்குப் பின்னால் சென்று நீண்ட நேரம் வெளியே வரவேயில்லை. அந்த ஏரியாவில் கேமரா இல்லை. இதனால் பிக்பாஸ் அவர்கள் இருவரின் பெயரை உச்சரித்தார். அதன் பின்னர் இருவரும் வெளியே வந்தார்கள். அப்படி வந்தவர்கள் பிக்பாஸ் தங்களது பெயரைச் சொல்லி அழைத்துள்ளாரே? எதற்காக அழைத்தார் என்று கேட்கவே இல்லை. இவர்களின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது, இவர்கள் இருவரும் மீண்டும் பிக்பாஸ் சொன்ன விதியை மீறி விட்டார்கள் அதனால்தான் அமைதியாக செல்கிறார்களோ என்ற சந்தேகத்தை பலருக்கும் எழுப்பியது.
ஓயோ ரூம்?: இந்நிலையில் பிரபல விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் சேதுபதியை டேக் செய்து, பார்வதியையும் கமருதீனையும் எப்போது வெளியேற்றுவீர்கள் என்று கேட்டுள்ளார். மேலும் சில இணையவாசிகள் விஜய் சேதுபதை மிகவும் மோசமாக சித்தரித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக இது பிக்பாஸ் வீடா? இல்லை ஓயோ அறையா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











