ஏங்க.. இது உங்களுக்கே நியாயமா இருக்கா.. கன்டென்ட் கிடைக்கலயா? வாங்கிக்கட்டும் பிக்பாஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
கடந்த புதன் கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறினார். அதனை வியாழக்கிழமையான நேற்றைய எபிசோடில் ஒளிபரப்பினார்கள்.
இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் கவின் போன பிறகு லாஸ்லியா சோகத்தில் மூழ்கியிருப்பதும் அவருக்கு தர்ஷன் ஆறுதல் கூறும் காட்சிகள் காட்டப்பட்டன. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டுவிட்டது, இதனை புரமோவாக போடுகிறீர்களே என்று திட்டி தீர்த்து வருகின்றனர்,
மோசமான புரமோ
பிக்பாஸ் மூன்றாவது சீசனில் மிகவும் மோசமான புரமோ என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இதுதான் புரமோவா?
என்னடா கன்டென்ட் இல்லாமா நேத்து அன்சீன புரமோவா போட்டிருக்க.. கவின் இல்லையோ என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
புரமோ எங்க?
அடேய் விஜய் டிவி யார ஏமாத்துற.. இது நேற்றைய எபிசோடுல வந்த சீன். புரமோ எங்க என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
சோகம் வந்துருச்சோ?
யோவ் பெரியபாசு ஏன் புரமோ லேட்டு? உனக்கும் கவினு வெளியே போனவுடன் சோகம் வந்துருச்சோ? வீ ஆர் த பாய்ஸ் ஊஊஊஊஊஊ! என்கிறார் இந்த நெட்டிசன்.
வியாழக்கிழமைக்கு வாங்க
நேற்றைய அன்சீன இன்னைக்கு புரமோவா போடுறீங்க பிக்பாஸ்.. என்ன புரமோ இது.. செவ்வாய்க்கிழமை நடந்ததுலேருந்து வியாழக்கிழமைக்கு வாங்க.. உங்க வேலையையாவது முறையா செய்யுங்க என்கிறார் இந்த நெட்டிசன்.
கட்டென்ட் இல்லையா?
புரமோவுக்கு கன்டென்ட் இல்லையா.. சாவுங்க.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
ஏதாவது பிராப்ளமா?
இது கவின் போற அன்னைக்கு நடந்தது.. இன்னைக்கு ப்ரோமோ என்ன ஆச்சி உள்ள எதுனா பிராப்ளமா என்று கேட்கிறர் இந்த நெட்டிசன்.
இன்னைக்கு புரமோவா?
இது கவின் போன பிறகு நடந்தது. ஆனா அதை இன்னைக்கு புரமோவா காட்றாங்க.. ஏன் வேற கன்டென்ட் கிடைக்கலயா என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











