பிக் பாஸ் 3: முதல் நாளிலேயே முதல் இரவு சீன் ஸ்சுட்வேஷன் கொடுத்த தர்ஷன்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg boss 3 Tamil: Day 1 Today Promo 1: நீரில்லா நீச்சல் குளத்தில் விழுந்த சாண்டி- வீடியோ

சென்னை: பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கில் முதல் நாளிலேயே ரேஷ்மாவுக்கு முதல் இரவு சீன் கொடுத்து பெயரைக் கெடுத்துக்கொண்டார் தர்ஷன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் முதல் நாள் போட்டியாளர்கள் இருந்தது குறித்து நேற்றைய எபிசோடில் ஒளிப்பரப்பானது.

முதல் நாளான நேற்று பிக்பாஸ் வீட்டின் கேப்டன், குக்கிங் டீம், கிளினிங் டீம், பாத் ரூம் கிளினிங் டீம், பாத்திரம் கிளினிங் டீம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டன. வழக்கமாக டாஸ்க் கொடுத்து ஒவ்வொருவரையும் தேர்வு செய்யும் பிக்பாஸ் இம்முறை குலுக்கல் முறையில் தேர்வு செய்துவிட்டார்.

பிக்பாஸ் வீட்டின் கேப்டன் வனிதா

பிக்பாஸ் வீட்டின் கேப்டன் வனிதா

அதன்படி பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக வனிதா விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டார். இதைபோலவே குக்கிங் டீம், கிளினிங் டீம், பாத் ரூம் கிளினிங் டீம், பாத்திரம் கிளினிங் டீம்களும் தேர்வு செய்யப்பட்டன.

டாஸ்க்கை செய்ய வேண்டும்

டாஸ்க்கை செய்ய வேண்டும்

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்தார். அதன்படி சக குடும்பத்தினர் கொடுக்கும் டாஸ்க்கை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்பது விதி.

அசராமல் ஆடிய சேரன்

அசராமல் ஆடிய சேரன்

சிறப்பாக செய்பவர்களுக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது இயக்குநர் சேரனுக்கு வேடிக்கையான டான்ஸ் மூவ்மென்ட் கொடுக்கப்பட்டது. மனுஷரும் அசராமல் ஆடி பாராட்டு பெற்றார்.

சிறப்பாக செய்த சாண்டி

சிறப்பாக செய்த சாண்டி

இதேபோல் நடன இயக்குநரான சாண்டிக்கு நள்ளிரவில் வெறி நாய் துரத்துவது போன்றும், திருடி விட்டு அழாமல் மன்னிப்பு கேட்பது போன்ற டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை சிறப்பாக செய்தார் சாண்டி.

கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்

கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்

இதைத்தொடர்ந்து தர்ஷன், ரேஷ்மாவுக்கு டாஸ்க் கொடுத்தார். அதாவது, முதல் இரவு அறையில் கணவருடன் ரேஷ்மா இருப்பது போன்ற ஸ்ட்சுவேஷனை கொடுத்தார் தர்ஷன். அப்போதே சக குடும்பத்தினர் ஓ... வென கத்தினர். இந்நிலையில் தர்ஷனை இப்படி ஒரு டாஸ்க் கொடுத்தற்காக நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர்.

தர்ஷன் உனக்கு ஒன்றும் இல்லையா?

தர்ஷன் உனக்கு ஒன்றும் இல்லையா எதற்கு ஃபர்ஸ்ட் நைட் பாத்ரூம் டாஸ்க் எல்லாம் கொடுக்குற என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

பாக்கதான் டீசன்ட் ஃபெலோ

தர்ஷன் ஏன்டா இப்படி கேள்வி கேக்குற? பாக்கதான் டீசன்ட் ஃபெலோ...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X