ஆண்டவா நீங்க இனி மக்கள் பிரதிநிதினு சொல்லாதீங்க..! சேரன் வெளியேற்றப்பட்ட தகவலால் கடுப்பில் ரசிகர்கள்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டதாக வெளியாகும் தகவல்களால் நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களிலேயே மிகவும் நேர்மையாக விளையாடிவர் இயக்குநர் சேரன்.

பின்னால் பேசாமல் மிகவும் உண்மையாகவும் டீசன்ட்டாகவும் விளையாடினார் சேரன். தன்னை பற்றி கவின் பின்னால் தவறாக பேசுகிறார் என்பதை அறிந்தும் அவர் அவராகவே இருந்து வந்தார்.

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்த சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சேரன் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக டிவிட்டரில் #அன்புள்ளஅப்பா என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்த வருகின்றனர். மேலும் சேரன் வெளியேற்றப்பட்டு கவின் காப்பாற்றப்பட்திலேயே நிகழ்ச்சி எவ்வளவு நியாயமாக இருக்கிறது என்பது தெரிகிறது என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

மக்கள் பிரதிநிதினு சொல்லாதீங்க

கமல் சார் ஆண்டவா நீங்க இனி மக்கள் பிரதிநிதினு சொல்லாதீங்க.. உங்களுக்கு அந்த வார்த்தைய பயன்படுத்தவே தகுதி இல்ல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பாழும் கிணறு

சேரன் வெளியேற்றப் படுவாரேயாயின்.. அதை நாம் ஏற்போமேயாயின்! நம் எதிர் கால சந்ததியினரை பாழும் கிணற்றில் தள்ளுவதற்கு சமம்! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பிக்பாஸ் ஆட்டம்

சேரன் மேல சில தவறுகள் இருக்கலாம் பிக் பாஸ் வீட்ல உள்ள எல்லா போட்டியாளர்களையும் கம்பேர் பண்ணி பாத்தா சேரன் மட்டும்தான் தனித்துவமா செல்ப் கேம் விளையாடிருக்காப்ள நிறைய விசயத்துல தன் கருத்தை அழுத்தமா சொல்லிருக்காப்ள பிக் பாஸ் ஆட்டமே செல்ப் கேம் தான் நல்லா விளையாடினீங்க சேரன். என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நேர்மையான தோல்வியே

#சேரன் சார் உங்களுக்கு கிடைத்த வாக்குகள் நேர்மையான வாக்குகள்... தோல்வியே கிடைத்தாலும் நேர்மையான தோல்வியே.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நல்லவருக்கு காலம் இல்லை

சேரன் சார் வெளிய போறது கூட மனச சமாதானம் பண்ணலாம் ஆனால் அதை விட கேவலமானவர்கள் உள்ள இருக்கும் போது தான் கொஞ்சம் கடுப்பா இருக்கு. நல்லவருக்கு காலம் இல்ல. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அப்பாவாக யார் என்று?

அப்பாக்களை நேசிக்கும் மகள்களுக்கு தெரியும். சேரன் அப்பாவாக யார் என்று.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நல்ல தகப்பன்

அன்புள்ளசேரன் நல்ல குடும்பதலைவன், நல்லதகப்பன், நல்லநண்பன் இதுதான் சேரன்! என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சேர் அப்பா நீ வேர் அப்பா

மகள்களை பெற்ற அப்பாகளுக்கு தான் தெரியும். முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை என்று.. மனுசன்..
சேர் அப்பா நீ வேர் அப்பா என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X