ரெண்டு குடும்பம் மானம் போயிரும்.. ஊரே சந்தி சிரிச்சிரும்.. கவின் லாஸை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க்கிலும் கவினும் லாஸ்லியாவும் காதலிப்பதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டும் பிக்பாஸ் வீடு இரண்டு கிராமமாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான புரமோ இன்று வெளியானது. டாஸ்க்கிலும் கவினும் லாஸ்லியாவும் தனிமையில் அமர்ந்து பேசி தங்களின் காதலை வளர்க்கின்றனர்.

உண்மையை பேசுகிறார்
இதனை வனிதா கண்டிக்கிறார். அப்போது ரெண்டு குடும்ப மானமும் போயிரும், ஊரே சந்தி சிரிச்சுரும், இந்த சனிக்கிழமை உங்க மாப்பிள்ளைக்கிட்ட பேசுறோம் என்கிறார். இதனை பாரத்த ரசிகர்கள் வனிதா பேசியது டாஸ்க் டயலாக்காக இருந்தாலும் உண்மையைதான் பேசுகிறார் என்று கூறியுள்ளனர்.
ஊரே சந்தி சிரிச்சிரும்
லாஸ்லியா கவின் ரெண்டு குடும்பம் மானம் போயிரும் ஊரே சந்தி சிரிச்சிரும்.. என வனிதா டயலாக்கை ரிப்பீட் செய்கிறார் இந்த நெட்டிசன்.
அங்கேயும் இப்படிதானா?
லாஸ்லியா நீங்க உங்க வீட்டுல உள்ளவங்களோட பேசுவீங்களா இல்ல அங்கேயும் பாய்ஸ் மட்டும்தான் இருப்பீங்களா என கேட்கிறார். லாஸ்லியா எப்போதும் கவினுடன் பேசிக்கொண்டிருப்பதால் இப்படி கேட்கிறார் இந்த நெட்டிசன்.
பல பேர் நிறுத்திட்டாங்க
கமல் கார் லாஸ்லியாவ சமைக்க சொல்லுங்க சாப்பிடுறது டிரெஸ் போடுறது மேக்கப் போடுறது, கடலை போடுறது மட்டும்தான் அவங்க வேலையா? ஏற்கனவே பல பேர் பிக்பாஸ் பாக்குறத நிறுத்திட்டாங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
நீ இலங்கை பெண் அல்ல
நல்ல வேலை செஞ்சிங்க வனிதா என்று கூறுகிறார் இவர். மேலும் நண்பர்களா இருந்த கவின், சாக்ஷிக்கு குறுக்க வந்து சும்மா இருந்த சாக்ஷிய பொஸஸிவ்வாக்கி நாமினேட் பண்ணி வெளியே அனுப்பி இப்ப நீ பண்ற செயலுக்கு பேரு காதல் இல்லை லாஸ்லியா. நீ இலங்கை தமிழ் பொண்ணு மாதிரி நடந்துகொள்ளவில்லை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
பல்லு காட்டி
இவங்க ரெண்டும் என்ன ரோமியோ ஜூலியட்டா.. இவன் ஒரு வழிஞ்சான்.. அது ஒரு பல்லு காட்டி.. அடேய் ஜீ தமிழ் அந்த நேரத்துல ஒரு நல்ல ஷோ போடுங்கடா.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
போகாது போல
அட ச்சை! இந்த கள்ள காதல் கன்டன்ட மட்டும் பிக்பாஸ் ஷோவை விட்டு போகாது போல... என கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











