அவெஞ்சர்ஸ் டீம் கோமாளி டீமா மாறிடுச்சு.. அதுக்கு தலைவர் கவின்.. கடுப்பில் நெட்டிசன்ஸ்
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிந்து கவின் தலைமையில் இயங்குவதால் நெட்டிசன்கள் இப்போதே கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், தனது சுயநலத்துக்காக கேங்க் ஃபார்ம் செய்துகொண்டு வலம் வருகிறார். இதுவரை பெண்களை மட்டும் வைத்து விளையாடிய கவின் தற்போது சாண்டி, முகென், தர்ஷன், லாஸ்லியா ஆகியோரை சேர்த்துக்கொண்டு தப்பிக்க பார்க்கிறார்.
கஸ்தூரியை அவர் அசிங்கப்படுத்துவது மட்டுமின்றி தனது கேங்கையும் அவருக்கு எதிராக திருப்பிவிட்டுள்ளார். கஸ்தூரியை கவினும் அவரது கேங்கும் அசிங்கப்படுத்தியது பார்வையாளர்களை கடுப்படைய செய்துள்ளது.
வனிதாவுக்கு எதிராக அவெஞ்சர்ஸ் டீம் என்று பெயர் எடுத்த அவர்கள் தற்போது அந்த பெயரை இழந்துவிட்டனர். அவெஞ்சர்ஸ் டீம் தற்போது கோமாளி டீமாக மாறிவிட்டது என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
கவின் லீடரா?
கவினுக்கு இரிட்டேட் ஆனா, ஏன் தர்ஷன், முகென், சாண்டியெல்லாம் அவன் பின்னாடி போறானுங்க. கவின் எல்லாம் பெரிய லீடர் மாதிரி, தர்ஷன சொம்பை ஆக்கிட்டானுங்க. கவின், வனிதாக்கு முன்னாடி இப்படி கெத்து காமிச்சிருந்தா ஓகே, வனிதாவ அக்கா அக்கான்னு பம்முவான் என்கிறார் இந்த நெட்டிசன்.
பேர கெடுத்துக்காத
டேய் முகென் அந்த கவினோட சேர்ந்து உன் பெயரை கெடுத்துக்காத என்கிறார் இந்த நெட்டிசன்.
தர்ஷனை நினைத்து கவலை
தர்ஷன், கவின் தலமைக்கு பின்னால் சென்று ஹீரோ என்ற இமேஜை கெடுத்து கொள்கிறார். உன்னை நினைத்தால் கவலையாக இருக்கிறது தர்ஷன் என்கிறார் இந்த நெட்டிசன்.
பெண்களை மதிக்க வேண்டும்
கவினும் சாண்டியும் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் இந்த நெட்டிசன்.
கோமாளி டீம்
அவெஞ்சர்ஸ் டீம் கோமாளி டீமா மாறிடுச்சு.. அதுக்கு தலைவர் கக்கூஸ் கவின்னு சொல்லும் போதே நினைச்சேன். வௌங்கிடும் என்கிறார் இந்த நெட்டிசன்.
மோசமான போட்டியாளர்கள்
கவின் மற்றும் சாண்டி பிக்பாஸ் சீசன் 3 மோசமான போட்டியாளர்கள், சேனல் அவர்களுக்கு சப்போர்ட் செய்கிறது என்று குமுறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











