என்னது கவின தள்ளிவிட்டது சாக்ஷியா? அட பாவமே.. இது வேறவா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் தன்னை தள்ளிவிட்டது சாக்ஷி என கவின் கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் முதலில் சாக்ஷியை காதலித்தார். அப்போது லாஸ்லியா தானாக வந்து கவினிடம் வீழ்ந்தார்.
இதனால் சாக்ஷியை கழட்டிவிட்டுவிட்டு லாஸ்லியா பின்னால் சுற்ற ஆரம்பித்தார் கவின். இதனால் இருவக்குள்ளுமான காதல் முறிந்துவிட்டது.

தலைதெறிக்க ஓட்டம்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடில் தன்கையே தனக்கு உதவி என்ற டாஸ்க் கொடுத்தார். இதனால் பிக்பாஸ் வீட்டில் தலைதெறிக்க ஓடினர் ஹவுஸ்மேட்கள்.

ஓடி வந்து விசாரிப்பு
அப்போது கவின் தடுக்கி கீழே விழுந்தார். கவின் விழுந்ததும் சாக்ஷியும், லாஸ்லியாவும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வந்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து டாஸ்க் முடிந்து கவின், சாண்டியிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

தள்ளி விட்டாளா?
அப்போது நானா தடுக்கி விழுந்தேனா அல்லது சாக்ஷி தள்ளிவிட்டாளா என்று சந்தேகமாக உள்ளது. சாக்ஷிதான் என் பின்னால் நின்றால் என கூறி சாக்ஷி மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்.

அபாண்டமாக பழி
இதனை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். என்னதான் பிடிக்கவில்லை என்றாலும், இப்படியா அபாண்டமாக பழிபோடுவது என கவினை கண்டித்துள்ளனர்.

செம காண்டு
ஏற்கனவே நான்கு பேரை காதலித்தால் பிரச்சனை வாராது என்ற யுத்தியை கையாண்டு நான்கு பெண்களின் எமோஷன்ஸ் உடன் விளையாடி வருகிறார் கவின். இதனாலேயே அவர் மீது செம காண்டில் உள்ளனர் ரசிகர்கள்.

விமர்சனம்
ஏற்கனவே கவினை காதலித்து பெயரை டேமெஜ் செய்துகொண்டுள்ளார் சாக்ஷி. இந்நிலையில் தனக்கு பிடிக்கவில்லை என்பதால் சாக்ஷி மீது அபாண்டமாக பழி சுமத்தியதை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
கவின் குறும்படம்
கக்கூஸ் கவின் குறும்படம் என்று நேற்று நடந்த சம்பவத்தை வைரலாக்கியுள்ளனர்.
ஒரு நாள் இருக்குடி
என்னடி பிளான் போடுறீங்க.. ஸ்நேக் பாபுக்கு ஒரு நாள் வலுவா இருக்கபோது அடி என்று கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











