வர வர கவின் மஹத் மாதிரியே மாறிட்டு வரார்.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீராவிடம் பாய்ந்த கவினை நெட்டிசன்ஸ் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
பங்கேற்ற நாள் முதலே சாக்ஷி, அபிராமி, லாஸ்லியா, ஷெரின், ரேஷ்மா என 5 பேரை காதலிப்பதாக கூறி அவர்களுக்கு பிட்டூ போட்டார். அவர்களில் ரேஷ்மாவும் லாஸ்லியாவும் விலக, தற்போது அபிராமி, சாக்ஷி, ஷெரின் என ஆட்டம் போட்டு வருகிறார் கவின்.

சகிக்க முடியல
ஆரம்பத்தில் ரசிகர்கள் கவின் மீது மரியாதை கொண்டனர். ஆனால் போக போக அவர் அபிராமி குரூப்புடன் சேர்ந்து கொண்டு செய்யும் வேலைகள் சகிக்க முடியவில்லை.

அவர்களுக்கு பிடிக்காததால்
குறிப்பாக சாக்ஷியையும் அபிராமியையும் தடவுவதையே முதல் வேலையாக கொண்டுள்ளார். அபிராமிக்கும் சாக்ஷிக்கும் மீராவை பிடிக்காத காரணத்தால் கவினும் மீராவிடம் சண்டைபோடும் வகையிலேயே நடந்து வருகிறார்.

மதுமிதாவிடம் எகிறிய கவின்
நேற்று முன்தினம் மதுமிதா என்ன கூறினார் என்பதே அறியாமலே எப்படி தமிழ்பெண் என்று கூறலாம் என எகிறினார். அபியை எப்படி தனிமை படுத்தலாம் என்றும் மதுமிதாவிடம் சண்டை போட்டார் கவின்.

யாரும் கண்டுகொள்ளவில்லை
இன்று வெளியான புரமோவில் மீராவை ஒரு பெண் என்றும் பாராமல் அறிவு இல்ல, அப்படி இப்படி என திட்டுகிறார். இதனை பிக்பாஸ் வீட்டில் யாரும் கண்டுகொள்ளவில்லை.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
இந்நிலையில் இப்படி பார்ஷியலா நடந்துகொள்ளும் கவினை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். கவினை கடந்த சீசனில் பங்குபெற்ற மஹத்துடன் ஒப்பிட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.
தவறாக பேசும் கவின்
தவறான வார்த்தையை மீரா பயன்படுத்தவில்லை. மீரா ஆர்க்யூமென்டின் போதும் கூட சார் மேடம் என்றே பேசுகிறார். அறிவு இருந்தாபடி என்கிறார் கவின். பெண்ணை கட்டுப்படுத்த குரலை உயர்த்துகிறார் மோகன் இதைத்தொடர்ந்து மீராவும் அமைதியாகிறார். என்கிறார் இவர்.
ஆணவம் ஆயிடுச்சு டோய்
கவினுக்கு கொஞ்சம் ஆணவம் ஆயிடுச்சு டோய்.. மோகன் பார்ஷியலாக இருக்கிறார். என்று கூறுகிறார் இவர்.
வந்துட்டாரூ ரூல்ஸ் பேசிக்கிட்
மைனர் குஞ்சு கவின் நீ என்ன பெரிய வெண்ணையா...வந்துட்டாரூ ரூல்ஸ் பேசிக்கிட்டு... என கோபப்படுகிறார் இந்த நெட்டிசன்.
மஹத் மாதிரியே
வர வர கவின் மஹாத் மாதிரியே மாறிட்டு வரார். பொண்ணுங்க பேச்சை கேட்டு சண்டை போடுறது. என்கிறார் இவர்.
ட்ரெஸ் போட்டுவிடுங்க
கவின் இன்னைக்கு போய் சாக்ஷிக்கு ட்ரெஸ் போட்டுவிடு
மீரா இருக்க வேண்டும்
கவின் முதலில் எலிமினேட் ஆகனும்.. மீராவுக்கு மெச்சூரிட்டி வர அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











