அய்யோ லாஸ்லியா போதும்மா.. சகிக்கல.. எங்கள முட்டாள்னு நினைச்சியா? பல்ஸை பிடித்த பார்வையாளர்கள்!

Recommended Video

Bigg Boss 3:19th August Promo2:Day57: Cheranனை அவமானம் படுத்தும் Losliya

சென்னை: பிக்பாஸ் வீட்டில் சேரனை நாமினேட் செய்துவிட்டு பின்னால் நல்லவர் போல் அழும் லாஸ்லியாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் வந்த புதிதில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவர் லாஸ்லியா. பிறர் குறித்து புறணி பேசாமல் இருந்து வந்தார்.

இதனால் மக்களின் நன்மதிப்பை பெற்றார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே கவினுடன் ஓவராக வழிந்து வந்தார் லாஸ்லியா இதனால் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க தொடங்கினார்.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

சாக்ஷியும் கவினும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் கவினுடன் கடலை போட்டு அவரை தன்பக்கம் இழுத்துக்கொண்டார் லாஸ்லியா. கவின் - சாக்ஷி காதல் முறிய முக்கிய காரணமாக இருந்தவர் லாஸ்லியா.

கவின் கேங்கில் தஞ்சம்

கவின் கேங்கில் தஞ்சம்

இந்நிலையில் தங்களின் காதலுக்கு இடையூறாக இருந்த சாக்ஷியை கவினும், லாஸ்லியாவும் நாமினேட் செய்து வெளியேற்றினர். தற்போது லாஸ்லியா மொத்தமாக கவின் கேங்குடன் தஞ்சம் அடைந்துவிட்டார்.

சேரனை அவாய்டு செய்யும் லாஸ்

சேரனை அவாய்டு செய்யும் லாஸ்

லாஸ்லியாவுக்கு தற்போது கவின் மிகவும் நெருக்கமாகிவிட்டார். எப்போதும் கவினுடன் மட்டுமே பேசுவத சிரிப்பது என கொண்டாடி வருகிறார் லாஸ்லியா. கவின் மீதான மோகத்தில் சேரனையும் அவாய்டு செய்ய தொடங்கிவிட்டார்.

பெரிய நம்பிக்கை துரோகம்

பெரிய நம்பிக்கை துரோகம்

சேரன் என்ன செய்தாலும் தவறு என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் லாஸ்லியா. நேற்று கமல் தலையிட்டு பஞ்சாயத்து செய்த பின்னர் சேரனிடம் சாரி சொல்லி அழுத லாஸ்லியா, இன்று நாமினேஷனில் சேரன் பெயரையே சொல்லி, பெரிய நம்பிக்கை துரோகத்தை இழைத்துவிட்டார்.

விளாசும் நெட்டிசன்கள்

விளாசும் நெட்டிசன்கள்

இதனால் நெட்டிசன்கள் அவரை கண்டமேனிக்கு திட்டி
தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரமோவில் நேற்று சேரனிடம் பேசிய விஷயத்தையே பேசி கண்ணீர் விடுகிறார் லாஸ்லியா. அவர் செய்வது நடிப்பு என்பதை உணர்ந்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விளாசி வருகின்றனர்.

ஒரு அழுகையை போடுவோம்

சேரனை நாமினேட் பண்ணிட்டேன்.. இப்போ மக்கள் என்னை திட்டுவாங்க.. ஒரு அழுகைய போடுவோம்.. என்று லாஸ்லியாவின் நடிப்பை கூறுகிறார் இந்த நெட்டிசன்

போதும்மா உன் நடிப்பு

உலகமாக நடிப்பு லாஸ்லியா. அங்க குத்திட்டு இங்க வந்து அழறீயா? கமல் சார் விளக்கினப்போ நீ சொன்னதுதான் சரின்னு பேசின. போதும்மா உன் நடிப்பு.. தர்ஷன் நீ அவளோட அழுகையில விழாதே.. இதெல்லாம் நீலி கண்ணீர். இங்க சப்போர்ட் வாங்கனும்னு போடுற வேஷம். அவளால் தனியாக நிற்க முடியாது.. அதுதான் உண்மை. இவ்வாறு கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

நாங்க ஒன்னும் முட்டாள்

உண்மை.. நேற்று சேரன் சார்கிட்ட அதை பேசிட்டு திரும்ப அதே பாயிண்ட்ட சொல்லி அழுறது இது ரொம்ப ஓவர். இந்த நடிப்ப நம்ப நாங்க ஒன்னும் முட்டாள் இல்ல என்கிறார் இந்த நெட்டிசன்.

இந்த நடிப்பு சகிக்கல

வர வர லாஸ்லியாவுக்கு நடிப்பு மறந்து போச்சுன்னு நெனைக்கிறேன்! பர்ஃபெக்ட் ஆக்டிங்க இல்ல இது! சகிக்கல.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஆடியன்ஸை ஏமாத்துறதுக்காக

இது சும்மா நடிப்பு, ஆடியன்ஸ்சை ஏமாத்துறதுக்காக என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

யாருக்கும் கிடைக்கக்கூடாது

சத்தியமா சொல்றேன் லாஸ்லியா உன்னைப்போல ஒரு மகள் எந்த அப்பாவுக்கும் கிடைக்க கூடாது!!! என்கிறார் இந்த ரசிகர்.

இருந்து என்ன லாபம்

திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X