ஏம்மா லாஸ்லியா.. இது உனக்கே நல்லா இருக்கா? வைரலாகும் போட்டோ.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil Unseen : வெறித்தனம் Overloaded

சென்னை: சேரன் மூச்சுப்பிடிப்பால் உட்கார முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் போது, லாஸ்லியா கவினுடன் சேர்ந்து செய்த காரியத்தை நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு போட்டியாளர்கள் எப்படியாவது ஃபைனல்ஸ்க்கு போய்விட வேண்டும் என தீவிரமாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சேரனுக்கு மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டது நேற்றைய எபிசோடில் தெரிந்தது. சக ஹவுஸ்மேட்ஸ்கள் அவருக்கு உதவி செய்ததும் நேற்றைய நிகழ்ச்சியில் தெரியவந்தது.

தவித்த சேரன்

தவித்த சேரன்

நடக்க முடியாமல் ஓட முடியாமல், டாஸ்க்கில் நிற்ககூட முடியாமல் தவித்தார் சேரன். இதனால் பால் டாஸ்க்கிலும் யாருடனும் போட்டி போடாமல் குடையை பேலன்ஸ் செய்தப்படி தனக்கு கொடுக்கப்பட்ட பந்துகளை காப்பாற்றிக் கொண்டால் போதும் என நின்றுக் கொண்டிருந்தார்.

விளையாட முடியாத டாஸ்க்

விளையாட முடியாத டாஸ்க்

இதேபோல் தங்க முட்டை டாஸ்க்கிலும் கூட தன்னால் தொடர முடியாமல் போனதால் எனக்கு கொடுக்கப்பட்ட தங்க முட்டையை யாராவது உடைத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு மற்றவர்கள் உதவியுடன் உள்ளே சென்றுவிட்டார்.

வெளியான போட்டோ

வெளியான போட்டோ

இந்நிலையில் சேரன் தவிக்கும் போது, மகளாக பாவித்த லாஸ்லியா செய்த வேலை ஒன்று போட்டோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது வீட்டில் உள்ள சோஃபாவில் சேரன் உட்கார முடியாமல் தவிக்கிறார்.

வைரலாகும் போட்டோ

வைரலாகும் போட்டோ

அப்போது அவரை திரும்பிக்கூட பார்க்காமல், கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் கவினுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் லாஸ்லியா. இந்த போட்டோதான் தற்போது வைரலாகி வருகிறது.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

இதனை பார்த்த நெட்டிசன்கள் நீயெல்லாம் என்ன பிறவி என கேட்டு லாஸ்லியாவை திட்டி தீர்த்து வருகின்றனர். அப்பா அப்பா என கூறிவிட்டு பக்கத்திலேயே அவர் அப்படி கஷ்டப்படும் போது அதனை கொஞ்சம் கண்டுகொள்ளாமல் தனது காதலனுடன் அமர்ந்து சாப்பிட எப்படிதான் மனசு வருகிறதோ என்று கேட்டும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

கவினுடன் கடலை

கவினுடன் கடலை

தனது பெற்றோர் கண்டித்த பிறகும் கூட திருந்தாத லாஸ்லியா கவினுடன் கடலை போட்டு வருகிறார். மேலும் கவின் வெற்றி பெற வேண்டும் என தன்னுடைய மதிப்பையும் குறைத்து வருகிறார் லாஸ்லியா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X