கள்ளக்காதலுக்கு விளக்கம் வேறயா? நீங்க எதுக்கு பிக்பாஸ் வந்தீங்க? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 60 : காதலை வெளிப்படையாக சொன்ன Losliya

சென்னை: கவின் மீதான காதலை லாஸ்லியா தெளிவுபடுத்திய நிலையில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா, கவின் மீதான தனது காதலை தெளிவாக சேரனிடம் கூறியுள்ளார். சாக்ஷியும் கவினும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் கவினுடன் நெருக்கமானார் லாஸ்லியா.

அப்போதெல்லாம் கவினை பிடிக்கும் அவருடன் கதைக்க பிடிக்கும் என்றும் தனக்கும் கவினுக்கும் இடையில் இருப்பது வெறும் நட்புதான் என்று கூறி வந்தார் லாஸ்லியா. கவினுடன் பேச இடைஞ்சலாக இருக்கும் சாக்ஷி வெளியேற வேண்டும் என்று எண்ணிய லாஸ்லியா சாக்ஷியின் பெயரை தொடர்ந்து நாமினேட் செய்து வந்தார்.

கவின் மீது காதல்

கவின் மீது காதல்

இந்நிலையில் சாக்ஷி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிதால் கவினுடனான நெருக்கத்தை அதிகரித்தார் லாஸ்லியா. தினமும் வெட்கம், கடலை, கதைப்பு, கொஞ்சல் என சென்று கொண்டிருந்த நிலையில் கவினை காதலிப்பதை ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளார் லாஸ்லியா.

உலகம் தேவையில்லை

உலகம் தேவையில்லை

மேலும் கவினுடனான உறவு குறித்து உலகம் என்ன பேசினாலும் எனக்கு கவலையில்லை என்றும் அது எனக்கு தேவையும் இல்லை என்றும் ஒரே போடாக போட்ட லாஸ்லியா, வெளியே போய் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுபோவோம் என அப்பா அப்பா என்று கூறி வரும் சேரனிடமே கூறியுள்ளார்.

கவினுக்கு வெளியே காதல்

கவினுக்கு வெளியே காதல்

இதனை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகியுள்ளனர். ஏற்கனவே கவினுக்கு வெளியே காதலி உள்ள நிலையில் இது கள்ளக்காதல் என்றும், இதற்கு தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தீர்களா என்றும் விளாசி வருகின்றனர்.

என்ன விளக்கம்?

கள்ளக்காதலுக்கு என்ன விளக்கம் வேண்டிருக்கு என்று காரித்துப்புகிறார் இந்த நெட்டிசன்.

உனகுகு முக்கியம்

உண்மைதான் லாஸ்லியா நீ இந்த உலகத்தை பற்றி கவலையில்லை. உன் சந்தோஷம் உனக்கு ரொம்ப முக்கியம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

எரிச்சலா இருக்கு

இதை சாக்ஷி உள்ளே இருக்கும் போதே சொல்லியிருக்கனும். எனக்கு அவன பிடிக்கும் ஃபிரன்டு ஃபிரன்டுன்னு சொன்ன இப்போ அதுக்கும் மேலன்னு சொல்ற ரொம்ப எரிச்சலா இருக்கு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

தரத்த குறைச்சிக்காதீங்க

நீ அடுத்த லெவலுக்கு கொண்டு போ.. இல்ல வேற எங்கெயாச்சும் கொண்டு போ.. இங்க இருக்குற வரை ஒழுங்கா கேம் விளையாடு, இந்த கொஞ்சல் வெட்கமெல்லாம் தேவையில்ல இந்த பிக்பாஸ்க்கு தேவையில்லை. ரொம்ப கன்றாவியா இருக்கு , இவ்ளோ நாள் லவ் இல்ல, இப்ப அடுத்த கட்டம், சேரன் சார் இ,ங்க அட்வைஸ் பண்ணி உங்க தரத்த குறைச்சிக்காதீங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

காரியவாதி

விஜய் டிவி அவர்களின் புராடெக்ட்டை நல்ல பெயருடன் காப்பாற்ற ரொம்பவும் முயற்சிக்கிறார்கள். நீங்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் குழந்தைகளுக்கு தவறான உதாரணத்தை காட்டுகிறீர்கள். வெளிய வந்தா கவின் கூட ஞாபகம் வச்சிருப்பான்.. யார் டா நீ னு கேப்பா லாஸ்.. காரியவாதி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

டைட்டில் கூட வின் பண்ணலாம்

இது நிஜமாவே எரிச்சலா இருக்கு, லாஸ்லியா என் அப்பாவைதான் நான் நேசிக்கிறேன், எங்களுக்காக அவர் குளிரில் கஷ்டப்படுகிறார் என்று கூறினார். இப்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அவள் குடும்பத்தை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் அவள் எப்படி இந்த பிளாட்ஃபார்மை பயன்படுத்தி கொள்கிறாள், கேமராவுக்கு முன் நடிக்கிறாள். அவள் ஆரம்பத்தில் இருந்தே போலியாகத்தான் இருக்கிறாள். அவளாகத்தான் இருக்கிறாள் டைட்டில் கூட வின் பண்ணலாம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

நியாயமா?

ஏம்மா தாயே அப்போ வெளியே போய்ட்டு இதெல்லாம் வைச்சுக்கலாமே? குழந்தைங்க பெரியவங்க எல்லாம் பாக்குறாங்கனு தெரிஞ்சும் நீங்க இப்படி பண்ணிட்டு இருக்குறது நியாயமா? என்று கேட்கிறார் நெட்டிசன்.

எதுக்கு பிக்பாஸ்க்கு வந்தீங்க?

லாஸ்லியா நீங்க எதுக்கு பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்க? என்று கேட்கிறார்.

கிளாஸ் எடுங்க பிக்பாஸ்

உலகம் என்ன நினைக்கிறாங்க அப்பிடின்னு இவளுக்கு தேவையே இல்லயாம், சுயநலவாதி. தனக்காக மட்டும் யோசிக்கிற நீ ஒரு சுயநலவாதி. குடும்பம்னா என்னனு தனியா இவளுக்கு ஒரு கிளாஸ் எடுங்க பிக்பாஸ் என்று கூறுகிறார் நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X