twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உனக்கு யாரு ஆதரவளிச்சா? பிக்பாஸை விட்டு வெளியேறிய பிறகும் வீடியோ போட்டு வாங்கிக்கட்டும் மீரா மிதுன்!

    |

    சென்னை: டிவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்த மீரா மிதுனை ரசிகர்கள் விளாசியுள்ளனர்.

    பிக்பாஸ் சீசன் 3யில் 16வது போட்டியாளராக பங்கேற்றார் மீரா மிதுன். இவர் மீது ஏற்கனவே பல்வேறு மோசடி புகார்கள் உள்ளன. இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த புகார்கள் தொடர்பாக மீரா மிதுனிடம் போலீசார் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று விசாரித்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலும் பலரிடம் பிரச்சனை செய்துவந்தார் மீரா மிதுன்.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதலே பிரச்சனைதான். யாருடனும் ஒத்துப்போகாமல் இருந்தார் மீரா. எல்லோருடனும் வாக்குவாதம் செய்து வந்தார்.

    பொய் புகார்

    பொய் புகார்

    இதனால் வாரம் தோறும் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்று வந்தார். கடந்த வாரம் இயக்குநர் சேரன் மீது கூறிய பொய் புகாரால் பார்வையாளர்களின் கோபத்துக்கு ஆளானார் மீரா.

    வெளியேற்றப்பட்ட மீரா?

    வெளியேற்றப்பட்ட மீரா?

    இதனை குறும்படம் மூலம் போட்டு மீரா சொன்னது பொய்தான் என்று நிரூபித்தார் கமல். இதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா.

    சந்திக்க முடியவில்லை

    சந்திக்க முடியவில்லை

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த உடனே உங்களை சந்திக்க நினைத்தேன். ஆனால் வேலை பளுவால் சந்திக்க முடியவில்லை என்றார்.

    ஆதரவு கொடுங்கள்

    ஆதரவு கொடுங்கள்

    மேலும் எல்லோரும் எப்படி இருக்கீங்க என்று கேட்கும் மீரா, பிக்பாஸ் வீட்டில் இருந்த 5 வாரங்களும் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றார். நான் என்ன செய்தாலும் குறை கூறும் ரசிகர்களுக்கும் நன்றி என்ற அவர் உங்களுக்காக நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்துள்ளேன் என் படங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சிரிச்சுட்டே இருங்க

    மேலும் தனது ரசிகர்களுக்காக மீரா மிதுன் ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். எப்போது சிரிச்சுக்கிட்டே இருங்கள் என்றும் கூறினார் மீரா.

    யாரு ஆதரவு கொடுத்தா

    மீராவின் அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர். உனக்கு எப்போ நாங்க ஆதரவளிச்சோம் என்றும் கேட்டு விளாசியுள்ளனர்.

    குறைச்சல் இல்லை

    இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று கூறி இந்த மீமை பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    திருந்தி வாழுங்கள்

    இனிமேலாவது திருந்தி வாழ முயற்சி செய்யுங்கள், ஆல் த பெஸ்ட் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

    English summary
    Netizens slams Meera Mithun for saying thanks on twitter
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X