ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்கய்யா அந்த ஆள.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1: Day:40 : Chithappu slams Cheran : சேரனுக்கு மரியாதை கொடுக்காத சித்தப்பு

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சரவணன், சக போட்டியாளரான சேரனை அடிக்கப்பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் பெஸ்ட் அன்ட் வொர்ஸ்ட் பர்ஃபார்மன்ஸ் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அப்போது சேரன், சரவணன் டான்ஸை தவிர வேறு எதுவும் கேப்டன் போல் செய்யவில்லை என கூறினார்.

உடனே பொங்கிய சரவணன் சேரனை போயா, வாயா என்றும் போடா வாடா என்றும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இதனால் ஷாக்கான சேரன் எதுவும் பேசாமல் வாயடைத்து போனார்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

இதனை பார்த்த ரசிகர்கள் சரவணன் மீது செம கடுப்பாகியுள்ளனர். எப்படி அப்படி பேசலாம் என கொதித்து போயுள்ளனர். மேலும் சரவணனுக்கு ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சரவணனை கண்டமேனிக்கு கழுவி ஊற்றியுள்ளனர் நெட்டிசன்கள்.

சரவணனுக்கு வாயில சனி

சரவணன் சாருக்கு வாயில சனி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

மரியாதை தெரியாத ஜென்மம்

சரவணனை முன்ப எவிக்ட் செய்யுங்கள் என்று கூறினேன். இப்போது இப்படி ஆகிவிட்டது. கொஞ்சம் கூட வெட்கம் இல்லாத ஜென்மம். சரவணனின் கெட்டப் மட்டும்தான் கேப்டன் போல் இருந்தது. ஆனால் டாஸ்க்கில் அவர் கேப்டன் போல் நடந்து கொள்ளவில்லை. மரியாதையே தெரியாத பிறவி என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மரியாதை தெரியாத ஜென்மம்

ரெட்கார்டு கொடுத்து அனுப்புங்கய்ய இந்த ஆள.. இரண்டு பொண்டாட்டி, பஸ்ல பெண்கள இடிக்கிறது, மத்தவங்கக்கிட்ட ரொம்ப திமிரா நடந்துக்குறது, சேரனை வாரா வாரம் நாமினேட் பண்றது, பிக்பாஸ் வீட்டில் உள்ள இளைஞர்களை மனசை கெடுத்து அவர்களை சேரனுக்கு எதிராக திருப்புவது, இப்போது இந்த அருவருக்கத்தக்க நடவடிக்கை என பட்டியல் போட்டுள்ளார் இந்த நெட்டிசன். மேலும் இந்த பிறவிக்கெல்லாம் யாரு ஓட்டு போடுறது என்றம் கேள்வி எழுப்பியுள்ளார் இவர்.

இல்ல எஸ்கேப் ஆயிடுவாரா?

கமல்ஹாசன் இதுபோன்று பிஹேவ் பண்ணுபவர்கள் தொல்லை கொடுப்பவர்கள் குறித்து இந்த வாராம் பேசுவாரா? இல்ல எனக்கும் இது நடந்திருக்குன்னு எஸ்கேப் ஆயிடுவாரா? இன்னும் பஸ்ஸில் பெண்களை உரசிய பிரச்சனையே ஆரவில்லை, அதற்குள் ஹவுஸ்மேட்ஸ்களை அடிக்கப்பாய்கிறார் என்று கூறுகிறார் இவர்.

வெளியே அனுப்ப போறாங்க

சித்தப்பு வெளியே போக ப்ளான் பண்ணிட்டாரு. ரெட் கார்டு கொடுத்து அனுப்ப போறாங்க என்று கூறுகிறார் இவர்.

சீக்கிரம் வெளிய அனுப்புங்க

ரவுடி பேச்சுக்காக பிக்பாஸ் வீட்டில் சித்தப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பஸ்ஸில் பெண்களை உரசிய விஷயத்திற்காக வெளியே அவருக்கு ரெட்கார்டு கொடுக்கப்பட்டுவிட்டது. அடுத்த வாரம் அவரை நாமினேட் செய்து சீக்கிரம் வெளியே அனுப்புங்கள், அவர் ஒரு மிரட்டல்காரர் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சாண்டிக்கு என்ன பிரச்சனை?

ஆரம்பத்தில் இருந்தே சரவணன் சேரனை வெறுத்து வருகிறார். அவருடைய ஆதரவாளர்களான சாண்டி, கவின் ஆகியோருடன் சேர்ந்து தேவையில்லாமல் சேரனை நாமினேட் செய்து வந்தார். சேரனுடன் சாண்டிக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. சரவணனும் சாண்டியும் சேரன் மீது வெறுப்பை காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X