சேரன் செஞ்ச பெரிய தப்பு இதுதான்.. சரவணனை டார் டாராக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: சேரன் குறித்து சரவணன் சொன்ன ஃபிளாஷ் பேக் அவருக்கே ரிவிட்டாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே சேரனை கண்டாலே சரவணனுக்கு பிடிக்கவில்லை. எப்போதும் சேரன் குறித்து கவின் மற்றும் சாண்டியிடம் தவறாக பேசுவதையே வேலையாக வைத்திருந்தார்.
நேற்று சேரனை முகத்துக்கு நேராகவே பேசினார் சரவணன். நீ, போ, வா என்றும் அடிக்கப்போவது போல் பாய்ந்தும் மிரட்டினார் சரவணன். இதனை பாரத்த ரசிகர்களே பதறினர்.

பிளாஷ்பேக்
இதைத்தொடர்ந்து சேரனை கண்டால் தனக்கு ஏன் பிடிக்கவில்லை என்பதையும் ஹவுஸ்மேட்ஸ்களிடம் விளக்கினார் சரவணன். தான் நடுரோட்டில் நின்று பட வாய்ப்பு கேட்டபோது, நீங்கள் செல்லாத உயரமா? நீங்கள் நடிக்காத நடிப்பா என்று கேட்டார். சேரன் இதுவரை எனக்கு தனது படத்தில் நடிக்க எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை என்று கூறினார் சரவணன்.

கிழிக்கும் நெட்டிசன்ஸ்
ஆனால் சேரன் சொன்னது சரவணனை புகழ்வது போலவே உள்ளது. அதில் ஒன்றும் சரவணனை சிறுமை படுத்தியதாக தெரியவில்லை. தனக்கு பட வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக 20 வருடங்களாக மனதில் நஞ்சை வைத்துக்கொண்டு இன்று அதனை வெளிப்படுத்திய சரவணனை நெட்டிசன்கள் டார் டாராக கிழித்து வருகின்றனர்.
பெரிய தப்பு
உன் கார் பஞ்சர் ஆகி நிக்கிறத பார்த்து, வண்டியே நிறுத்தி, உன் கிட்ட வந்து பேசுனது தான் அந்தாளு செஞ்ச பெரிய தப்பு. நிக்காம பேசாம போயிருந்தா, இப்போ உன் முன்னாடி இப்படி அசிங்கப்பட்டு நிக்கவேண்டி வந்துருக்காது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்ன.
நாகரீகம் இல்லாதவர்
சரவணனை பார்க்கவே அருவருப்பாக உள்ளது. நாகரீகமே இல்லாத நபர். அவர் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டிய ஆள் என்று கூறுகிறார் இவர்.
எப்பவுமே கிடைக்காம
சரவணனுக்கு எப்போவோ படத்துல நடிக்க சான்ஸ் கிடைக்காததுக்கு, கவினுக்கு எப்போவுமே நடிக்க சான்ஸ் கிடைக்காத மாதிரி அவனை மாத்திட்டான். எப்படி நஞ்சை விதைச்சுருக்கான் பாரு. வெளங்காதவன் என்று வசை பாடுகிறார் இவர்.
சேரன் வெற்றியில் பொறாமை
சரவணன் 1999ஆம் ஆண்டு நடந்த நிகழ்வை கூறுகிறார். சேரன் சொன்னதில் என்ன தவறு உள்ளது. சேரன் சொன்னது அவரை புகழ்வது போல்தான் உள்ளது. சரவணனுக்கு சேரன் பெற்றதில் பொறாமை உள்ளது என்று கூறுகிறார்.
நீங்க எங்க?
ராதிகாமா சீன் எதுக்கெல்லாம் உதவுது பாருங்க.. இரண்டு பிள்ளைங்க எதிர்காலத்த நினைச்சு கவலைப்பட்ட அவர் எங்க? ரெண்டு பொண்டாட்டிங்கள ஒரே வீட்டுல விட்டுட்டு வந்த நீங்க எங்க? என சரவணனை கிழிக்கிறார் இந்த நெட்டிசன்.
அடுத்தவங்க பண்ணுனா தப்பா?
சரவணன் சில வாரங்களுக்கு முன்பு அபிராமி அவரை பேட் பர்ஃபாமன்ஸ்க்காக நாமினேட் செய்த போதும் இதையேதான் செய்தார். அவரு மட்டும் பண்ணுவாரு அடுத்தவங்க பண்ணுனா தப்பா என்று கேட்கிறார் இவர்.
சேரன் வேற லெவல்
சரவணன் தனிப்பட்ட பகையை மனதில் வைத்துள்ளார். சேரன் வேற லெவல். ஆனால் சரவணன் வெளியில் இருந்து எல்லா குப்பையையும் அள்ளி கொண்டு வந்து சாண்டி கவினை வைத்து குரூப் ஃபார்ம் செய்து கொண்டு சேரன் மீது காட்டுகிறார். என்று கூறுகிறார் இவர்.
ஏன் அவமானப்படுத்த வேண்டும்?
சேரனின் வெற்றி மீது சரவணனுக்கு பொறாமை. ஒரு மனிதர் கஷ்டப்பட்டு மேலே வருவதை ஏன் அவமானப்படுத்த வேண்டும். அசிஸ்ட்டன்ட் டைரக்டராக ஹீரோ வீட்டில் காத்திருப்பதில் என்ன தவறு? இதில் உண்மையில் பார்க்க வேண்டியது யாருடைய வெறியால் தேசம் பெருமை கொள்கிறது என்பதைதான். என்று கூறுகிறார் இவர்.
நீங்களே சொல்லுங்கள் கமல்
ஒருவரை ஒருவர் அநாகரிகமாக
பேசுவது டிவிட்டர்ல மட்டுமில்லை விஜய் டிவியில வர்ற #பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தான். மதிக்க படவேண்டியவர் இயக்குனர் சேரன் என்பதை அறியாதவரா #சரவணன் சொல்லுங்கள் கமல்ஹாசன் அவர்களே..!! என்கிறார் இவர்.
மனநிலை மருத்துவப் பரிசோதனை
#சேரன் எவ்வளவுதான் நாகரிகமாக ஒதுங்கிப் போனாலும் தொடர்ந்து அநாகரிகமாகவே நடந்துகொள்ளும் #சரவணன், மனநிலை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய காலம் வந்தாச்சோ? என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
பெண்களை பஸ்ஸில் உரசி
பெண்களை காவியமாக வைத்து பல நல்ல படைப்புகளை கொடுத்த #சேரன் எங்க.. அதே பெண்களை பஸ்சில் உரசிவிட்டு வெட்கமே இல்லாமல் சபையில் சொன்ன இந்த சரவணன் எங்க.. இந்த வாரம் #சாக்ஷி அடுத்த வாரம் #சரவணன். என்கிறார் இவர்.
இது பொறாமை
#சரவணன் எதுக்கு #சேரன் மேல இவளோ கோவப்படுறாரு...
சின்ன பிளாஷ் பேக். இது பொறாமை குணத்தால் வந்த பகை...
ஒரு மனுஷன் வளரனும்ன இதெல்லாம் தாண்டி தான் வரணும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











