என்ன தர்ஷன் இப்படி பண்ணிட்டீங்க.. உங்க மேல உள்ள மரியாதையே போச்சு போங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலிடம் வனிதாவுக்கு எதிராக பேசிய தர்ஷனை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கின் பெஸ்ட் பர்ஃபாமராக தர்ஷனும் வனிதாவும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஷெரினுக்கும் தர்ஷனுக்கும் வனிதா தேர்வு செய்யப்பட்டது பிடிக்கவில்லை.
இந்நிலையில் இன்றைய புரமோவில் பெஸ்ட் பர்ஃபாமராக உங்களை நீங்களே தேர்வு செய்து கொண்டீர்களா? எல்லோரும் பேசி தானே தேர்வு செய்யவேண்டும் என்று கூறினார் கமல்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்
அதற்கு பதிலளித்த சேரன் நான்கு பேரும் பேசிதான் தேர்வு செய்தோம் என்றார். ஆனால் தர்ஷன் இல்லை என்று கூறினார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அப்போதே ஏன் சொல்லவில்லை என்று கேட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.
நடிக்காதே
தர்ஷன் நீ என்ன அப்போ டிஸ்கஸ் பண்ணும்போது வேற்று கிரகத்துக்கு போயிருந்தியா உனக்கு உடன்பாடு இல்லனா அப்போவே சொல்லவேண்டியது தானே? இப்போ ஏன் சொல்ற? ஒழுங்காக விளையாட வேண்டும் கைத்தட்டல்களை வைத்து நடிக்காதே என்கிறார் இந்த நெட்டிசன்.
சுத்த வேஸ்ட்
தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் நீ செய்த நல்ல காரியம் முதல் முறை வனிதாவை எதிர்த்து கேள்வி கேட்டதுதான். அதனால் நீ செய்யும் எல்லா விஷயங்களும் கேட்கும் கேள்விகளும் சரி என்று ஆகி விடாது. உன்னுடைய ஆர்க்யூமென்ட்ஸ் எல்லாமே சுத்த வேஸ்ட் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இப்ப சொல்ற
தர்சன் நீயும் அங்கதான் இருந்த அப்ப சொல்லியிருக்கலாமே பெஸ்ட் பர்ஃபாமர் யாருனு.அப்ப வாயமுடிட்டு இருந்த இப்ப கமல் கேட்டவுடன் இப்ப சொல்லுற. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
வனிதாவின் தவறு இல்ல
பெஸ்ட் பர்ஃபாமருக்காக நான் வனிதாவிடம் ஆர்க்யூ பண்ணவோ அல்லது சண்டைபோடவோ விரும்பவில்லை என்று தர்ஷன் பதில் சொல்லுவான். ஆனால் அது வனிதாவின் தவறு அல்ல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
தனித்தன்மை போய்விட்டது
பெஸ்ட் பர்ஃபாமர் செலக்ட் பண்ணும் போது தர்ஷன் தூங்கிட்டு இருந்தியா? நீ எப்போ கக்கூஸ் கேங் கூட சேர்ந்தியோ அப்போவே உன்னுடைய தனித்தன்மை காணாமல் போய்விட்டது என்கிறார் இந்த நெட்டிசன்.
மரியாதையே போயிடுச்சு
தர்ஷன் இதை நீ பெஸ்ட் பர்ஃபாமர் செலக்ட் பண்ணும் போது சொல்லியிருக்கனும். இப்போ கமல் மற்றும் ஆடியன்ஸ் ரியாக்ஷன் வச்சு சொல்றீயே.. உன் மேல இருந்த மரியாதையே போயிடுச்சு. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அவங்க மாதிரி ஆயிட்ட
தர்சன் நீயும் கக்கூஸ் கேங் கூட இருந்து அவங்கள மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்ட என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











