வனிதாவ பாகிஸ்தான் பாடர்ல கொண்டு போய் விடுங்கய்யா.. பிரச்சனை தீர்ந்துவிடும்! நெட்டிசன்ஸ் அதகளம்!

Recommended Video

Bigg Boss 3 Tamil:Promo 1: கஷ்டத்தில் ஆதரித்த மதுவை திட்டும் அபி

சென்னை: பிக்பாஸ் விட்டில் மற்றவர்களிடம் சண்டை போட்டு வரும் வனிதாவை நெட்டிசன்கள் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் யார் கிடைப்பார் சண்டைபோட என அந்த மனநிலையிலேயே சுற்றி வருபவர் வனிதா. பிக்பாஸ் வீட்டின் பிரச்சனையை தீர்ப்பதாக கூறி பிரச்சனையை பெரிதாக்கி வருகிறார்.

மேலும் ஒருவர் கூறுவதை மற்றவரிடம் அப்படியே கூறி சண்டை மூட்டி விடுவது, யார் என்ன பேசினாலும் ஒட்டுக்கேட்பது என கேவலமாக நடந்து வருகிறார் வனிதா. அவரது நடவடிக்கை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பிடிக்கவில்லை.

வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் எவிக்ஷன் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார் வனிதா. அவரை எப்படியாவது வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் நெட்டிசன்கள். அதற்காக வனிதா விஜயக்குமாரை சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

எவ்ளோ அதிகாரம்

அது பிக்பாஸ் வீடா இல்ல வனிதா வீடான்னே தெரியல... அவ்ளோ அதிகாரம்.. இது தான் வெளிய அனுப்புறத்துக்கு சரியான நேரம் என கூறுகிறார் இந்த நெட்டிசன்.

வனிதாவுக்கு பதிலடி

தர்ஷன்: அப்ப நீங்க அன்டைக்கு மீராவ தூக்குல தொங்கு என்டீங்க.அது என்ன? நிஜமாவா சொன்னீங்க?
வனிதா மைன்ட் வாய்ஸ் : ப...ப.. தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை நடுவர் அவர்களே மொமென்ட்.
நல்ல அடி தர்ஷன் என பாராட்டுகிறார் இந்த நெட்டிசன்

முட்டாள் கும்பல்

யாரு தலைமை பொறுப்புக்கு வந்தாலும் நம்ம தான் கேப்டன்னு வனிதா நினைக்குறா இந்த நினைப்பு தான் உன் பொழப்ப கெடுக்க போகுது. தர்ஷன் தலைமை பொறுப்புக்கு வந்தா இந்த ஜன்மங்களுக்கு புத்தி வரும். இந்த முட்டாள் கும்பலுக்கு பதிலடி கொடுங்க தர்ஷன். என்கிறார் இவர்.

பிரச்சனை தீரும்

#வனிதாவை பாகிஸ்தான் பார்டர்ல கொண்டு போய் விட்டுடனும். அவங்களுக்குள்ளேயே போட்டுக்கொடுத்து சண்டை மூட்டி விட்டு ஒருத்தனை ஒருத்தன் அடிச்சுட்டு சாவான். நம்ம பக்கம் திரும்பவே மாட்டான். ஒரே நாள்ல நம்ம பிரச்சனையும் தீர்ர்ந்துடும், நம்ம நாட்டு பிரச்சனையும் தீர்ந்துடும். என்கிறார் இவர்.

ஒபீனியன் கிரியேட்டர்

#மதுமிதா மீண்டும் #தமிழ்மக்களால் காப்பாற்றப்படுவார். புலம் பெயர்ந்த தமிழ் போட்டியாளர்கள் அவரை காப்பாற்றுவதைப் போல். ஒபீனியன் கிரியேட்டர் வனிதா வெளியே அனுப்பப்பட வேண்டும். என கூறுகிறார் இந்த நெட்டிசன்.

என்னா வாயி...

பல சொர்ணாக்காவின் கூட்டுதான் இந்த வனிதா என்னா வாயி.. என பிரமிக்கிறார் இந்த நெட்டிசன்.

வெளியே துரத்தனும்

இது அஜித் இல்ல வனிதா!
வெளியே துரத்தனும் இந்த பீடையை என கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கேவலமான நபர்

மிக மோசமான நபர் வனிதா
இந்த அதிகாரம், திமிர், எவ்வளவு பெரிய வாய் ,மிககேவலமான நபர் வனிதா என்கிறார் இந்த நெட்டிசன்.

சந்தேகத்திலேயே சாவுங்கடா

வனிதா, சாக்ஷி அகர்வால், ஷெரின் இவங்க மூனு பேருக்கும் உள்ள பிரச்சினை என்னவென்றால் சந்தேக புத்தி யார் யாருகூட பேசினாலும் இவர்களுக்கு எதிராக பேசுகிறார்கள் என்றுதான் சந்தேகப்புத்தி. சந்தேகத்திலேயே சாவுங்கடா என கூறுகிறார் இந்த நெட்டிசன்.

வனிதா வெளியேறினால்

இந்த வாரம் வனிதா விஜயக்குமார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினால் இந்த உலகத்திலேயே நான் தான் மகிழ்ச்சியான நபராக இருப்பேன். என்கிறார் இவர்.

வனிதா சத்தத்துக்கு..

வனிதா சத்தத்துக்கு மீன் மார்க்கெட் சத்தம் எவ்வளவோ மேல் என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X