சாக்ஷி எலிமினேட்டட்.. விஜய் டிவி போட்ட டிவிட்ட பாத்தீங்களா? கடுப்பான ரசிகர்கள்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Sakshi 1st Post: மறைமுகமாக Kavinனை தாக்கும் Sakshi- வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சாக்ஷி எலிமினேட் ஆனது குறித்து விஜய் டிவி போட்டுள்ள டிவிட் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சாக்ஷி நேற்று வெளியேறினார். சாக்ஷியை முதலில் வெளியேற்றுங்கள் அவர்தான் பிரச்சனைக்கு காரணம் என்றனர் ரசிகர்கள்.

தொடர்ந்து வாரா வாரம் நாமினேஷனுக்கு வந்த சாக்ஷி, கடந்த இரண்டு வாரங்களாக தப்பித்து வந்தார். இந்நிலையில் ஒரு வழியாக நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

சற்று சோகம்

சற்று சோகம்

சாக்ஷி செய்த விஷம தனத்தால் அவரை விஷம், பாய்சன், சினேக்ஷி என்று வசை பாடி வந்தனர் நெட்டிசன்கள். ஆனால் நேற்று சாக்ஷி வெளியேறியது சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து கேட்ட விஜய் டிவி

இனி கவின் - லாஸ்லியாவின் ரூட் க்ளியர் ஆகிவிடும், எந்த பிரச்சனையும் இன்றி இருவரும் கதைக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் சாக்ஷி எலிமினேட் குறித்து டிவிட்டிய விஜய் டிவி, ஈமோஜியை போட்டு கருத்து கேட்டுள்ளது. அதில் அய்யா ஜாலி, அய்யோ போச்சே என்று ஆப்ஷன் வேறு கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பொழப்பா?

இது ஒரு பொழப்பா?

இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர். இது ஒரு பொழப்பா என்று கேட்டுள்ள நெட்டிசன்கள், விஜய் டிவியை கடுமையாக சாடியுள்ளனர். நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள கருத்துக்களில் சில,

ஈமோஜிக்கு புரமோஷனா?

என்ன விஜய் டிவி ஈமோஜிக்கு புரமோஷன் தர்றீயா.... அடேய் சரவணன் ஏன் போனாறுன்னு கமல்ஹாசன் கூட சரியா சொல்ல மாட்டேங்குறாறு.. ரொம்ப ஏமாற்றமா இருக்கு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கெட்டவங்கனு காட்ற

உன்கிட்ட இருக்க மீடியாங்குற பவரை வச்சு எவ்ளோ அழகா ஒருத்தரை கெட்டவங்கனு காட்ற..இதுல கைதட்ட பணம் கொடுத்து ஒரு கூட்டம் வேற..கேடு கெட்ட எச்ச மீடியா.. என திட்டுகிறார் இந்த ரசிகர்.

மண்டையில ஏறாது

இப்போ கூட நம்ம இவ்ளோ திட்டுறது இந்த விஜய் டிவிக்கு மண்டையில ஏறாது.. இப்பவும் கடவுளே 440 கமென்ட்ஸ், 36 ரீடிவிட்ஸ், 481 லைக்ஸ்ன்னு பார்த்து நம்ம போட்டது சரியான டிவிட்டுதான்னு அவங்களையே அவங்க என்கரேஜ் பண்ணிப்பாங்க என்கிறார் இவர்.

நக்கிட்டு போக போகுது

எங்களுக்கு ஒன்னும் இழப்பு இல்ல, உங்க டிஆர்பிதான் நக்கிட்டு போக போகுது என்கிறார் இந்த நெட்டிசன்.

விளையாடினவன்?

சாக்ஷியை எலிமினேட் பண்ணிட்டிங்க ஆனா அவளோட ஃபீலிங்ஸோட விளையாடி அவள எலிமினேட் ஆகவச்ச நபர் இன்னும் வீட்டுக்குள்ளதான் இருக்காரு. இப்போ அவரு ஜாலியா வேற பொண்ணு கூட இருக்காரு. ஆனா அவன் உண்மையா லவ் பண்றான்னு நினைச்சு டிஸ்டர்ப் ஆகி இப்போ இந்த பொண்ணு வெளியே போயிடுச்சு என்கிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X