Don't Miss!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜய் டிவியின் வேகாத முட்டைகள் கவினும் சாண்டியும்.. சேரன் எவிக்ட்டானதால் கடுப்பான மக்கள்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டதால் கடுப்பாகியுள்ள மக்கள் கவினையும் சாண்டியையும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சேரன் வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்த சேரன், எவிக்ஷன் முறைப்படி வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சேரன் வெளியேற்றப்பட்டார். ஆனால் அவரை சீக்ரெட் ரூமில் தங்கவைத்தது விஜய் டிவி.
மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய லாஸ்லியா.. கால் மேல் கால் போட்டு ஆட்டியபடியே கமலுக்கு பந்தாவாக பதில்!
நேற்று வெளியேற்றம்
மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சேரன், கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றார். இதனை தொடர்ந்து நேற்று சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது ஒளிபரப்பப்பட்டது.
காப்பாற்றும் விஜய் டிவி
பெண்களின் உணர்வுகளோடு விளையாடி பெண்களை தனது சுயநலத்திற்கு பயன்படுத்தும் கவினை வெளியே அனுப்பக் கோரி எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. ஆனால் விஜய் டிவி அவற்றையெல்லால் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
விஜய்டிவிக்கு திட்டு
மாறாக மக்களின் மதிப்பை பெற்ற சேரனை நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் விஜய் டிவியையும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
|
யாருக்கும் இனி ஓட்டு இல்லை
சேரன் சார் எவிக்டடு.. இனி ஓட்டு போடுறவேலை மிச்சம்.
'உள்ளே' உள்ள யாருக்கும் இனி என் ஓட்டு இல்லை.
எப்படியோ போங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
அவசியம் இல்லை
சேரன் சார் இல்லன்னா பிக் பாஸ் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார் இவர்.
|
வேகாத முட்டைகள்
சேரன் அவர் பெயரைச் சொல்வதற்குக் கூட அருகதையற்றவர்கள் கவினும், சாண்டியும். விஜய் டிவி வளர்த்தெடுத்த 'கலாய்த்தல் கலாச்சாரத்தின் 'வேகாத முட்டைகள் அவை என்று சாடுகிறார் இந்த நெட்டிசன்.
|
யுவராஜ் சிங் மாதிரி
சேரன் சார் யுவராஜ் சிங் மாதிரி தான்!!! எப்படி யுவராஜ் எப்போவோ 6 பால்ல 6 சிக்ஸ் அடிச்சதுக்காக இன்னமும் கொண்டாடுறாங்களோ அதுமாதிரி சேரனும் அவருடைய இதிகாச படைப்பிற்காக கொண்டாடப்படுவார். இரண்டாவது இன்னிங்ஸிலும் வெற்றி பெறுவார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
கானல் நீரென்று நினைத்தாயோ
கலைந்து போக கானல் நீரென்று நினைத்தாயோ விஜய் டிவி. எங்கள் அன்புள்ளசேரன் ஜெயாடிவியில் தவமாய் தவமிருந்ததின் வழி காண்கிறோம். நீ என்ன குட்டிகரணம் போட்டாலும் இப்படி ஒரு பெரிய இயக்குநர் உன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இனிவரும் காலங்களில் கிடைக்கவே கிடைக்கமாட்டார் என்கிறார் இந்த நெட்டிசன்.
|
டிவில பாக்குற குரூப்
வெகு ஜன ஆதரவு சேரனுக்கு நல்லாவே இருக்கு !! ஆனா என்ன செய்ய... இந்த சென்னையன்ஸ் இணையத்துல பொங்கீட்டு எலக்ஷன்ல டைம்ல வாக்குச்சாவடிக்கு போகாத மாதிரி , இங்க சேரனப் பிடிச்சவங்க பூரா டீவில பிக்பாஸ் பாக்குற குரூப்.. மெனக்கெட்டு ஓட்டுப் போட மாட்டாங்க போல என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
|
கண்ணியம் மிகுந்த மனிதன்
நிஜமாகவே ஓரு கண்ணியம் மிகுந்த மனிதன் சேரன் சார் என்று கூறுகிறார் இவர்.
|
உண்மை தன்மையை இழந்தது
லாஸ்லியா போனால் பணம் லாஸ் ஆகியிருக்கலாம் விஜய் டிவி பாராட்டப்பட்டிருக்கும். ஆனால் பாரமான நாடகம் போட்டு சேரன் அவர்களை வெளியே அனுப்பியதால் மீண்டும் ஒருமுறை மக்கள் நம்பிக்கையையும் உண்மை தன்மையையும் இழந்தது விஜய் டிவி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.