twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் டிவியின் வேகாத முட்டைகள் கவினும் சாண்டியும்.. சேரன் எவிக்ட்டானதால் கடுப்பான மக்கள்!

    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 92 : ஷெரினுக்காக Chilli சாப்பிட்ட தர்ஷன்

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டதால் கடுப்பாகியுள்ள மக்கள் கவினையும் சாண்டியையும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சேரன் வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்த சேரன், எவிக்ஷன் முறைப்படி வெளியேற்றப்பட்டார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சேரன் வெளியேற்றப்பட்டார். ஆனால் அவரை சீக்ரெட் ரூமில் தங்கவைத்தது விஜய் டிவி.

    மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய லாஸ்லியா.. கால் மேல் கால் போட்டு ஆட்டியபடியே கமலுக்கு பந்தாவாக பதில்!மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய லாஸ்லியா.. கால் மேல் கால் போட்டு ஆட்டியபடியே கமலுக்கு பந்தாவாக பதில்!

    நேற்று வெளியேற்றம்

    நேற்று வெளியேற்றம்

    மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சேரன், கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றார். இதனை தொடர்ந்து நேற்று சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது ஒளிபரப்பப்பட்டது.

    காப்பாற்றும் விஜய் டிவி

    காப்பாற்றும் விஜய் டிவி

    பெண்களின் உணர்வுகளோடு விளையாடி பெண்களை தனது சுயநலத்திற்கு பயன்படுத்தும் கவினை வெளியே அனுப்பக் கோரி எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. ஆனால் விஜய் டிவி அவற்றையெல்லால் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

    விஜய்டிவிக்கு திட்டு

    விஜய்டிவிக்கு திட்டு

    மாறாக மக்களின் மதிப்பை பெற்ற சேரனை நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் விஜய் டிவியையும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

    யாருக்கும் இனி ஓட்டு இல்லை

    சேரன் சார் எவிக்டடு.. இனி ஓட்டு போடுறவேலை மிச்சம்.
    'உள்ளே' உள்ள யாருக்கும் இனி என் ஓட்டு இல்லை.
    எப்படியோ போங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    அவசியம் இல்லை

    சேரன் சார் இல்லன்னா பிக் பாஸ் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார் இவர்.

    வேகாத முட்டைகள்

    சேரன் அவர் பெயரைச் சொல்வதற்குக் கூட அருகதையற்றவர்கள் கவினும், சாண்டியும். விஜய் டிவி வளர்த்தெடுத்த 'கலாய்த்தல் கலாச்சாரத்தின் 'வேகாத முட்டைகள் அவை என்று சாடுகிறார் இந்த நெட்டிசன்.

    யுவராஜ் சிங் மாதிரி

    சேரன் சார் யுவராஜ் சிங் மாதிரி தான்!!! எப்படி யுவராஜ் எப்போவோ 6 பால்ல 6 சிக்ஸ் அடிச்சதுக்காக இன்னமும் கொண்டாடுறாங்களோ அதுமாதிரி சேரனும் அவருடைய இதிகாச படைப்பிற்காக கொண்டாடப்படுவார். இரண்டாவது இன்னிங்ஸிலும் வெற்றி பெறுவார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    கானல் நீரென்று நினைத்தாயோ

    கலைந்து போக கானல் நீரென்று நினைத்தாயோ விஜய் டிவி. எங்கள் அன்புள்ளசேரன் ஜெயாடிவியில் தவமாய் தவமிருந்ததின் வழி காண்கிறோம். நீ என்ன குட்டிகரணம் போட்டாலும் இப்படி ஒரு பெரிய இயக்குநர் உன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இனிவரும் காலங்களில் கிடைக்கவே கிடைக்கமாட்டார் என்கிறார் இந்த நெட்டிசன்.

    டிவில பாக்குற குரூப்

    வெகு ஜன ஆதரவு சேரனுக்கு நல்லாவே இருக்கு !! ஆனா என்ன செய்ய... இந்த சென்னையன்ஸ் இணையத்துல பொங்கீட்டு எலக்‌ஷன்ல டைம்ல வாக்குச்சாவடிக்கு போகாத மாதிரி , இங்க சேரனப் பிடிச்சவங்க பூரா டீவில பிக்பாஸ் பாக்குற குரூப்.. மெனக்கெட்டு ஓட்டுப் போட மாட்டாங்க போல என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

    கண்ணியம் மிகுந்த மனிதன்

    நிஜமாகவே ஓரு கண்ணியம் மிகுந்த மனிதன் சேரன் சார் என்று கூறுகிறார் இவர்.

    உண்மை தன்மையை இழந்தது

    லாஸ்லியா போனால் பணம் லாஸ் ஆகியிருக்கலாம் விஜய் டிவி பாராட்டப்பட்டிருக்கும். ஆனால் பாரமான நாடகம் போட்டு சேரன் அவர்களை வெளியே அனுப்பியதால் மீண்டும் ஒருமுறை மக்கள் நம்பிக்கையையும் உண்மை தன்மையையும் இழந்தது விஜய் டிவி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Netizens Slams Vijay TV for sending out Cheran and saving Kavin in Biggboss. Vijay TV is saving Kavin Who people not like.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X