சாப்பிட உட்காந்தவனை தரதரன்னு இழுத்துபோட்ட மாதிரி தரங்கெட்ட சம்பவம்! பிக்பாஸை கழுவி ஊற்றும் மக்கள்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day :44 : சித்தப்பு வெளியேறியதால் நிலைகுலைந்த பிக் பாஸ் வீடு-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணனை அதிரடியாக வெளியேற்றிதற்காக விஜய் டிவியை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

தனது கல்லூரி பருவத்தில் பஸ்ஸில் பெண்களை உரசியதாக கூறிய சரவணன் மன்னிப்பு கேட்ட பிறகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குழு நேற்று சரவணனை பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றியது.

தான் செய்த தவறுக்கு சரவணன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டப்பிறகும் சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் பார்வையாளர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

மன்னிப்பு கேட்டார்

மன்னிப்பு கேட்டார்

சரவணன் கோபப்படுவார், மனதில் பட்டதை பட்டென பேசிவிடுவார். ஆனால் மற்றபடி அவர் ஒன்றும் அவ்வளவு கெட்டவர் அல்ல. சேரனுடன் மட்டும்தான் அவருக்கு நான்சிங் இருந்தது. அதையும் தவறு என உணர்ந்து சேரனிடம் கடந்த சனிக்கிழமை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சென்றார் சரவணன். இந்நிலையில் சரவணன் வெளியேற்றப்பட்டிருப்பதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஸ்க்ரிப்டடுதான்

போங்கடா நீங்களும் உங்க பிக்பாஸும். சித்தப்பு சரவணன் தான் மனதில் பட்டதை பேசி ரியாலிட்டி ஷோவுக்கு தேவையானதை கொடுத்தார். இப்போது இது தெளிவாகிவிட்டது இந்த நிகழ்ச்சி ஸ்க்ரிப்டடுதான் என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

மிகக்கேவலமாக இருக்கிறது

அப்போதெல்லாம் கண், வாய் எல்லாம் செயல்படவில்லை. ஒருத்தர் தப்பு செய்ததை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டு அதுவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதற்கு பிறகும் உங்களது இந்த நடவடிக்கை மிகக் கேவலமாக இருக்கிறது. இந்த நாட்டுலதான் நியாயம் எப்பவும் கிடைக்காதே. என்று விமர்சிக்கிறார் இந்த ரசிகர்.

அப்போ கமல்?

அடுத்தவன் மனைவி மீது இராவணன் கொண்ட ஆசையை ஒரு தலைகாதல் என்று உரைத்து புனிதமானது என்று பெண்மையை அசிங்கபடுத்திய கமல் அவர்களை வெளியேற்றுமா விஜய் டிவி என்று கேட்கிறார் இவர்.

தரங்கெட்ட சம்பவம்

பந்தியில் சோறு திங்க உக்காந்தவனை, மொய்காசு இல்லைன்னு தரதரன்னு இழுத்து போட்ட மாதிரி தரங்கெட்ட சம்பவம்.. என்று குமுறுகிறார் இந்த நெட்டிசன்.

என்ன பண்ண போறீங்க?

பெண்களை உரசினதா சொல்லிட்டான்னு வெளிய அனுப்பிட்டாங்களாம்.. நீ பிக்பாஸ்ங்கற பேருல மாமா வேல பாக்குறியே அதுக்கு என்ன பண்ண போற என்று கேட்கிறார் என்று நெட்டிசன்.

யார் சொல்லி அனுப்புன?

பிக் பாஸ்க்கு ஒரு பெரிய கும்பிடு. சரவணன் சொன்னப்போ சும்மா இருந்த , மீடியா நியூஸ் போட்டப்போ மன்னிப்பு கேட்க சொன்ன, இப்போ யார் சொல்லி வெளியே அனுப்புன ? அவன் சொன்னப்போ சிரிச்சிட்டு இருந்த கமலையும் மாத்திரு. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்

தேவையில்லாமல்

சரவணன் அந்த சம்பவம் தொடர்பாக எல்லா பெண்களிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனாலும் தேவையில்லாமல் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் சரவணன் என்று கூறுகிறார் இவர்.

டிஆர்பிக்காகன்னு தோனுது

கடந்த காலத்துல செஞ்சிருந்தாலும் தப்பு தப்பு தான், பிக்பாஸ் செஞ்சது சரியே, ஆனால் இதனை அந்த எபிசோடில் அன்றே செய்து இருந்தால் இன்னும் பெரிதளவு நியாயமாக பேசப்பட்டு இருக்கும், இவளோ நாள் கழித்து அனுப்பியதால் டிஆர்பி க்காக என்று தான் தோனுகிறது.

இதை பண்ண தெரியல

சேரன் ரஜினி மாதரி கேள்வி கேட்டா அத எடிட் பண்ண தெரிஞ்ச பிக்பாஸ்க்கு சரவணன் கைய தூக்கி பேசுனத எடிட் பண்ண தெரியலயாம் .. உங்க டிஆர்பி க்கு சரவணனை வெளிய அனுப்பிட்டீங்க என்று கூறுகிறார்.

சரவணன்தான் தப்பானவரு

அப்டியே அந்த வீட்ல எல்லாரும் பொண்ணுங்கள ரொம்ப கண்ணியமா பாக்குறாங்க. இதுல சரவணன் மட்டும் தப்பானவரு. இதற்கு பின்னாடி ஒரு லாபியே விளையாடியிருக்கிறது, ஒரே ஒரு தர்மபத்தினியால் டிரிகர் செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறுகிறார் இவர்.

கண்டிக்கிறேன்

சரவணன் அவர்கள் அந்த பஸ் சம்பவத்துக்காக தொலைக்காட்சி மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டார். ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றிய பிக்பாஸ் குழுவை நான் கண்டிக்கிறேன் என்று கூறுகிறார் இவர்.

சரவணன் பலிகடா

டேய் சரவணன் மன்னிப்பு கேட்ட வீடியோ போட்டுட்டு
உங்க ஷோ இமேஜ் காப்பாத்த பலிகடாவாக்கி சரவணனை வெளிய அனுப்பிட்டிங்களேடா.. என்று கூறுகிறார் இவர்.

யோக்கியனா?

இனி எவனும் வெளிப்படையாக தன்னுடைய குற்றத்த்தை ஒப்புக்கொள்ள மாட்டான். சரவணனை வெளியேற்றி தன்னை யோக்கியனாக காமிக்கிறது விஜய் டிவி என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X